வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பேசிக்கிட்டே இருந்தா எப்படி அடிச்சு காட்டுங்க.. வெறி கொண்ட சிங்கத்தை சுரண்டி விட்ட பிக்பாஸ் குட்டி சாத்தான்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி நாளொரு சண்டையும் பொழுதொரு கலவரம் என சென்று கொண்டிருக்கிறது. அதில் போட்டியாளர்களுக்கு இப்போது எலிமினேஷன் பயமும் சேர்ந்து கொண்டது. அதனாலயே ஆளாளுக்கு கன்டென்ட் கொடுக்கிறேன் என சண்டை கட்டி வருகின்றனர்.

அதில் கடந்த இரு நாட்களாக விஷ்ணு மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே நடக்கும் சண்டை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதில் விஷ்ணு தேவை இல்லாமல் வம்பு இழுப்பது அர்ச்சனாவின் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இதில் பிக்பாஸ் குட்டி சாத்தான் ரவீனாவும் வான்ட்டடாக வந்து சிக்கியுள்ளார். ஏற்கனவே இவர் மாயாவுக்கு கிளாஸ் எடுக்கும் அளவுக்கு விஷபாட்டிலாக இருக்கிறார். ஒண்ணுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக்கொண்டு பிரச்சனையை மூட்டி விட்டு ஓடி விடுவதில் இவர் கில்லாடி.

Also read: இந்த வாரம் கமல் அடித்து விரட்ட போகும் கொலு பொம்மை.. இணையத்தை கலக்கும் பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

அப்படித்தான் சிவனேன்னு உட்கார்ந்து இருந்த விஷ்ணு அர்ச்சனாவிடம் போய் இவர் வாயை கொடுத்து நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார். அதாவது நீங்க ரெண்டு பேரும் பேசி பிரெண்ட்ஸ் ஆயிடாதீங்க சண்டை போடுங்க என அவர் கூறியதை கேட்டதும் அர்ச்சனா சந்திரமுகியாகவே மாறினார்.

என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது என ரவுண்டு கட்ட ஆரம்பித்ததில் ரவீனா முகம் பேயறைந்தது போல் ஆனது. இருந்தாலும் நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன் என அவர் பம்மிய போதும் வெறி கொண்ட வேங்கையாக இருந்த அர்ச்சனா ரவீனாவை ஓட ஓட விரட்டி பொளந்து கட்டினார்.

ஆனாலும் கெத்தை விடாத இந்த பேய் குழந்தை ஆமா நீங்க சண்டை போட்டா எனக்கு ஜாலியா இருக்கு என வாய்க்கு வந்ததை உளறி தப்பித்து போய்விட்டது. ஆனால் இதை பார்த்த அர்ச்சனாவின் ரசிகர்கள் ரவீனாவை இப்போது ட்விட்டர் தளத்தில் கிழி கிழி என கிழித்து கொண்டிருக்கின்றனர்.

Also read: மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும ஜோவிகா.. தமிழை கொன்னு கூறு போடும் வாயாடி பெத்த பொண்ணு

Trending News