வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கத்தை கத்தையாய் அள்ளிக் கொடுத்த பிக்பாஸ்.. கொடுத்த காசுக்கு மேல கூவும் போட்டியாளர்களின் சம்பள பட்டியல்

Biggboss 7 Contestants Salary: கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா சேனல்களுக்கு பிக்பாஸ் 7 ஏகப்பட்ட கன்டென்ட் கொடுத்து வருகிறது. அதிலும் இந்த சீசன் இதுவரை இல்லாத அளவுக்கு சர்ச்சைகளையும் பஞ்சாயத்துகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அந்த அளவுக்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். இதற்காகவே பிக்பாஸ் இவர்களுக்கு கத்தை கத்தையாய் பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

இப்படி கொடுத்த காசுக்கு மேல் கூவும் போட்டியாளர்களின் சம்பள விவரம் என்ன என்ற விவரம் தற்போது கசிந்துள்ளது. அதன்படி இந்த சீசனில் மிகவும் குறைவான சம்பளம் வாங்கியவர்கள் என்றால் அது ஜோவிகா, நிக்சன், அனன்யா மூவரும் தான். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

Also read: 3 லட்சம் வாக்குகளை கைப்பற்றிய அர்ச்சனா.. மாயக்காரியை காப்பாற்ற பலியாடாக போகும் போட்டியாளர் இவர்தான்

அடுத்ததாக அர்ச்சனா, மணி, அன்னபாரதி, பிராவோ, விஜய் வர்மா, ஐசு, பூர்ணிமா, சரவண விக்ரம், அக்ஷயா, வினுஷா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதில் பூர்ணிமா இந்த சம்பளத்தோடு 16 லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடைசி நேரத்தில் தேர்வானவர் தான் கூல் சுரேஷ். அவருக்கும் ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. அதை அடுத்து மாயா, பிரதீப், தினேஷ் ஆகியோருக்கு 20000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

அடுத்து யுகேந்திரன், விஷ்ணு, கானா பாலா, ரவீனா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இவர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் என்று பார்த்தால் அது விசித்ரா தான். சீனியர் நடிகை மற்றும் ரொம்பவும் பிரபலமானவர் என்பதால் அவருக்கு ஒரு நாளைக்கு 30,000 சம்பளம் பேசியிருக்கின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also read: ஃபேன் இல்ல, AC போடணும்.. கோட் வேர்ட் மூலம் பிளான் பி-யை இறக்கும் பிக்பாஸ் குள்ளநரி

Trending News