Biggboss 7: நாளுக்கு நாள் சுவாரசியத்தை அதிகப்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. பிரதீப் வெளியேற்றப்பட்டதிலிருந்தே சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பொங்கி வருகின்றனர். அதில் உலகநாயகனின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகி இருக்கிறது.
அதற்காகவே இப்போது விஜய் டிவி ஒரு பிளான் போட்டு மொத்த கும்பலையும் மாட்டி விட்டிருக்கிறது. அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் இதுவரை வீட்டில் போட்டியாளர்கள் படுமோசமாக பேசியதை டிவியில் போட்டு காட்டியுள்ளனர். அதை யார் பேசியது என்று அவர்களே முன்வந்து விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதில் நிக்சன் வினுஷாவை பார்த்து வேலைக்காரி, உடல் அமைப்பு சரியில்லை என்று கேவலமாக வர்ணித்தது போன்ற அனைத்து வார்த்தைகளும் அடங்கி இருக்கிறது. இது ஏற்கனவே சோசியல் மீடியாவில் கடும் ஆட்சேபத்திற்கு ஆளானது. வினுஷா கூட வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு இதை ஆதங்கத்தோடு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Also read: மாயா ஒரு பஜாரி, ஆம்பளைங்களே அவ பேசுறதை பார்த்து ஓடுவாங்க.! கேவலப்படுத்திய யுகேந்திரன்
இந்த சூழலில் நிக்சன் பிக்பாஸின் இந்த குறும்படத்தால் ஆடிப் போனது வெளிப்படையாகவே தெரிந்தது. இருந்தாலும் நானும் ரவுடிதான் என்ற ரேஞ்சில் அவர் நா அந்த அர்த்தத்துல சொல்லல என்று சப்பை கட்டு கட்டியது நிச்சயம் ரசிக்கும்படி இல்லை. அது மட்டுமல்லாமல் ஏதோ போனா போகுதுன்னு சாரி என்ற ஒரு வார்த்தையை அவர் போகிற போக்கில் சொன்னதும் திமிரின் உச்சகட்டம்.
ஆனாலும் இந்த வார ஆரம்பத்தில் இருந்தே நாங்க வேற மாதிரி என விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். தப்புக்கு எதிராக நாங்கள் நிற்போம் என அவர்கள் ஒவ்வொருமுறை வாதாடும் போதும் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் நிக்சன் விவகாரத்தில் அவர்கள் மூவரும் இப்ப பதில் சொல்லு பார்க்கலாம் என்று கெத்தாக அமர்ந்திருந்தது நிச்சயம் வேற லெவல் மாஸாக இருந்தது. ஏனென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இவர் போர் கொடி தூக்கியது மட்டுமல்லாமல் பிரதீப்பையும் கீழ்த்தரமாக நடந்துக்கிறான் என கேவலமாக விமர்சித்தார்.
Also read: முதல்ல ஆம்பளைங்க கற்புக்கு கேரண்டி கொடுங்க ஆண்டவரே.! நாராசமாக பேசும் பிக்பாஸ் அராத்திகள்
ஆனால் இவர் ஒரு பெண்ணை அக்கா என்று சொல்லிவிட்டு இவ்வளவு மோசமாக வர்ணித்துள்ளார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஐஷு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட இவர்கள் பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் கொடுத்தது நியாயமே கிடையாது. இப்போதாவது ஆண்டவர் நடுநிலையாக தீர்ப்பு வழங்குவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.