சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிக்பாஸ் பூகம்ப டாஸ்க்கால் கிளம்பும் பூதம்.. விசித்ராவை போல் ஆண் போட்டியாளருக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்

Biggboss7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பூகம்பத் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். அதில் வாழ்க்கையில் நடந்த பூகம்ப விஷயங்களை சொல்ல வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து அனைவரும் ஒவ்வொரு விஷயங்களை கூறினார்கள். அதில் விசித்ரா 20 வருடங்களுக்கு முன்பு தனக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர் அனுபவத்தை பகிர்ந்திருந்தார். மிகப்பெரும் பிரளயமாக வெடித்த அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பிராவோ அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

அதாவது அவருக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதன் தயாரிப்பாளர் பிராவோவுக்கு போன் செய்து மீட் செய்ய வேண்டும். உங்களை நான் பெரிய அந்தஸ்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறி இருக்கிறார். அதை நம்பிய பிராவோ தயாரிப்பாளரை பார்ப்பதற்காக ஒரு ஹோட்டல் ரூமுக்கு சென்று இருக்கிறார்.

Also read: விஸ்வரூபம் எடுக்கும் விசித்ராவின் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்.. ஹீரோவுக்கு எதிராக கொடி பிடிப்பாரா ஆண்டவர்.?

அங்கு அந்தத் தயாரிப்பாளர் அவருக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்து படுமோசமாக நடந்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத பிராவோ எப்படியோ அடித்துப் பிடித்து வெளியில் ஓடி வந்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு தான் அவர் இந்தியாவே வேண்டாம் என்று துபாய்க்கு சென்றாராம்.

இப்போதும் கூட தனியாக ஒரு ஆணுடன் லிப்டில் பயணிக்க நேர்ந்தால் அவருக்கு பயமாக இருக்குமாம். தன்னை மிகவும் பாதித்த இந்த விஷயத்தில் இருந்து இப்போதும் கூட என்னால் வெளிவர முடியவில்லை என அவர் கூறியிருந்தார். இது வீட்டில் இருப்பவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நாட்டுல பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதுகாப்பே இல்லை என பிராவோவுக்கு ஆதரவாக இப்போது கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு விஷயங்களையும் நாளை ஆண்டவர் நிகழ்ச்சியில் நிச்சயம் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக இந்த வார பூகம்ப டாஸ்க் பல பூதங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது.

Also read: டிவி சேனலில் இப்பவும் டிஆர்பி யில் அசைக்க முடியாத 5 படங்கள்.. ஜெயிலர், வாரிசுலாம் பின்னாடி தான் போல

Trending News