ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சாத்தான் வேதம் ஓதுதா.? தில்லுமுல்லு செஞ்சி கப்பு வாங்கிட்டு ஓவர் ரவுசு விடும் பிக்பாஸ் வின்னர்

Biggboss: எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர இருக்கும். ஆனால் இந்த சீசனில் வெறும் எதிர்ப்பும், வெறுப்பும் மட்டும் தான் நிறைந்து இருக்கிறது. அதில் ஒவ்வொரு சீசனிலும் ஆடியன்ஸுக்கு பிடிக்காத போட்டியாளர்கள் கட்டாயம் இருப்பார்கள்.

அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் கத்தி கதறினாலும் விஜய் டிவி மனது வைத்தால் தான் அது நடக்கும். அப்படித்தான் கடந்த சீசன் டைட்டில் வின்னரான அசீம் மக்கள் வெறுக்கும் ஒரு நபராக இருந்தார். ஓவர் ஹீரோயிசம் காட்டுவது, நாவடக்கம் இல்லாமல் வார்த்தைகளை விடுவது என இவர் செய்த அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது.

அதனாலேயே இவர் ஜெயிக்க கூடாது என்று மக்கள் விரும்பினார்கள். ஆனால் விஜய் டிவி அவரை டைட்டில் வின்னர் ஆக அறிவித்தது. இதற்குப் பின்னால் பல தில்லுமுல்லு வேலைகள் இருந்தது அனைவருக்கும் தெரியும். அதிலும் அசீம் தன் பிஆர் டீமை வைத்து சில பல வேலைகளை பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

Also read: ஒரு நாள் சம்பளத்தை தாரைவார்க்கும் மாயா.. விஜய் டிவியின் அரசியலை தோலுரித்த பாய்சன்

இதில் கமலுக்கும் கூட விருப்பம் கிடையாது. அதை பிரதீப் ரெட் கார்டு வெளியேற்றத்தின் போது அவர் நாசுக்காக கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசீம் எனக்கு மக்கள் ஓட்டு போட்டு தான் அந்த கப் கிடைத்தது. கமல் சாருக்கு இப்ப வந்த டவுட் போன சீசன்லயே ஏன் வரல.

சேனல் தரப்புக்கு நெருக்கமாக இருக்கும் அவர் இப்படி பேசியது சரி கிடையாது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கமல் விஜய் டிவியின் டிஆர்பிக்கு ஒத்து ஊதுவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால் மக்களின் கருத்து என்ற பிட்டை மட்டும் அவ்வப்போது போட்டு விடுவார். அதை ஓப்பன் ஆக உடைத்து பேசிய அசீமின் பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.

ஆனால் ஏதோ மக்களே விருப்பப்பட்டு அந்த கப்பை கொடுத்த மாதிரி அவர் பேசுவது ஏற்புடையதாக இல்லை. ஒருவேளை மக்கள் எங்களுக்கு விருப்பமில்லைன்னு சொன்னா அந்த கப்பை திருப்பிக் கொடுத்து விடுவாரா? ஆக மொத்தம் இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு இவர் கட்டும் ரவுசு ஓவராக தான் இருக்கிறது.

Also read: அதெல்லாம் பேசக்கூடாது, நீ ஏன் அதை சொல்ற.? ஆண்டவர் தலையை உருட்டும் பூர்ணிமா

- Advertisement -

Trending News