புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அந்த அசிங்கத்தை என் கண்ணால பார்த்தேன்.. சிவகார்த்திகேயனின் வண்டவாளத்தை அம்பலமாக்கிய பிஸ்மி

Sivakarthikeyan: வந்த வேகத்திலேயே சரசரவென உச்சாணி கொம்புக்கு ஏறிய சிவகார்த்திகேயன் இப்போது கடும் சர்ச்சையான பிரபலமாக மாறி இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இவருக்கும் இமானுக்கும் இருக்கும் பிரச்சினை தான் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அவ்வப்போது இந்த விஷயம் ஓய்ந்தாலும் முற்றுப்பெறவில்லை என்பதுதான் உண்மை. சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்தும் இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான விளக்கமும் வரவில்லை. அதன்படி வலைப்பேச்சு பிரபலங்களான பிஸ்மி, அந்தணன் தான் இந்த விஷயத்தை முதன்முதலாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

அதைத்தொடர்ந்து இமான் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொன்னதும் இந்த விவகாரம் பிரளயமாக வெடித்தது. தற்போது பிஸ்மி இந்த விவகாரத்தில் முக்கிய ஆதாரம் இருப்பதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

Also read: முதலாளியாக விருதுகளை குவிக்கும் சிவகார்த்திகேயன்.. ட்விட்டரில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஏற்கனவே வலைப்பேச்சு அந்தணன் சிவகார்த்திகேயன் இமான் மனைவிக்கு செய்த மெசேஜ் பற்றி என கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து பிஸ்மியும் அந்த ஆதாரத்தை நான் என் கண்ணாலேயே பார்த்தேன் அந்த அசிங்கம் வெளியில் வந்தால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் காலியாகிவிடும்.

ஒருவேளை இது பொய்யான குற்றச்சாட்டு என்றால் அவர் ஏன் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த விஷயம் வெளிவந்த மறுநாளே இமானின் மனைவி, சிவகார்த்திகேயன் பாவம் நல்லவர், எங்களுக்கு உதவி செய்யத்தான் வந்தார் என ஒரு பேட்டியை கொடுத்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு தான் சர்ச்சை பெரிதாக வெடித்தது. ஆளாளுக்கு சிவகார்த்திகேயனின் வண்டவாளத்தை அம்பலப்படுத்திய நிலையில் அவர் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு இருந்தார். ஆனாலும் தீபாவளி அன்று குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு மறைமுக பதிலடிம் அவர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: குதிரை மாதிரி விழுந்து எழுந்திருத்து ஓடும் 5 நடிகர்கள்.. கோடிகளில் கடன் இருந்தும் அசராத சிவகார்த்திகேயன்

Trending News