ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கோள்மூட்டி விட்டு குடும்பத்தை பிரித்த SK-வின் செயல்.. 11 ஆயிரம் ஓட்டு போட வைத்து கேவலப்படுத்திய ப்ளூ சட்டை

Sivakarthikeyan and Blue Sattai Maran: எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு கண்டுபிடிக்கிறது ரொம்பவே கஷ்டம் என்று சொல்வார்கள். அது தற்போது சிவகார்த்திகேயன் விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் நாறி கொண்டிருப்பது சிவகார்த்திகேயன் நம்பிக்கை துரோகம் செய்த கேவலமான செயல் தான். இதை தற்போது ஓட்டு கணக்கெடுப்பின் மூலம் சிவகார்த்திகேயன் முகத்திரையை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அதாவது இசையமைப்பாளர் இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருடைய முதல் மனைவி விவாகரத்துக்கு முக்கிய காரணமே சிவகார்த்திகேயன் தான் என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து நல்லா இருந்த என் குடும்பத்துக்குள் கும்மி அடித்துப் போய்விட்டார்.

இதை அவரிடம் நேரடியாக கேட்டதற்கு அவர் கொடுத்த பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்து மன வேதனையை அளித்தது. அதன்பின்னே நான் என்னுடைய மனைவியை முழு மனதுடன் விவாகரத்து செய்தேன். நான் இப்படி முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயனின் கேவலமான செயல் தான்.

அத்துடன் என் மனைவிடம் தேவையில்லாமல் பல விஷயங்களை கோள்மூட்டி கொடுத்து எங்களுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக சீரழித்ததும் சிவகார்த்திகேயன் தான் என்று கூறி இருக்கிறார். இந்த ஒரு விஷயம் தான் தற்போது நாலா பக்கமும் காட்டு தீ போல் பரவி இருக்கிறது. இதற்கு சிவகார்த்திகேயன் பக்கத்திலிருந்து பல எதிர்ப்புகள் தெரிவித்தாலும் இவர் மீது தப்பு இருப்பது அப்பட்டமாகி விட்டது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் அவருடைய கேரியரையும் வாழ்க்கையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தற்போது இவரே பல வீடியோக்களை ரெடி பண்ணி வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோவில் சில பிரபலங்கள் சிவகார்த்திகேயனைப் பற்றி மிகவும் பெருமையாக பேசியதை போட்டு வைரலாக்கி வருகிறார். இது எல்லாம் இவர் மேல் தப்பு இல்லை என நிரூபிப்பதற்காக சிவகார்த்திகேயன் செய்த சதி வேலை போல் தெரிகிறது என்று பலரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் ப்ளூ சட்டை மாறன் ஓட்டு கணக்கு எடுத்திருக்கிறார். அதில் கணவன் மனைவி இடையே கோள்மூட்டி விட்டு குடும்பத்தை பிரித்தது சிவகார்த்திகேயனின் செயல் என்று டேக் பண்ணி அதற்கு கீழே சரியானதா, கேவலமானதா என்று கேட்கப்பட்டிருக்கிறார். அதில் 80% ஓட்டு சிவகார்த்திகேயனின் செயல் கேவலமானது என்று வந்திருக்கிறது. இதை சோசியல் மீடியாவில் ப்ளூ சட்டை மாறன் போட்டு கேவலப்படுத்தி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் கேவலமான செயலை கேவலப்படுத்திய ப்ளூ சட்டை

blue-sattai
blue-sattai

Trending News