திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வசூலில் மிரள செய்யும் ஜெயிலர் படம்.. பொறுக்க முடியாமல் கமல், மணிரத்னம் என பஞ்சாயத்தை கூட்டும் ப்ளூ சட்டை

Blue Sattai Maaran: சினிமா விமர்சகராக யூடியூப் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ப்ளூ சட்டை மாறன், படங்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் முன்னணி ஹீரோக்களை தேவையில்லாமல் டேமேஜ் செய்து பிரபலமானவர். நடிகர்கள் விஜய், அஜித் என அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்படி பிரபலமான இவர் கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி தேவையில்லாத விமர்சனங்கள் செய்வதோடு, அவருடைய ரசிகர்களையும் பயங்கரமாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஜெயிலர் படம் ரிலீசானதில் இருந்து இவருடைய சேட்டைகளும் ரொம்பவே அதிகமாகிவிட்டது. படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களால் ரொம்பவும் நொந்து போய் இருக்கிறார் ப்ளூ சட்டை.

Also Read:ரஜினி கொடுத்த பூஸ்ட் 2ம் பாகத்திற்கு தயாரான நெல்சன்.. இத்தனை படங்களா? என்னடா இது வெறித்தனமா இருக்கே!

முதலில் ரஜினி ரசிகர்கள் என்னை விமர்சனம் செய்யவிடாமல் தடுக்க கொலை மிரட்டல் விடுகிறார்கள் என குட்டையை குழப்பிய ப்ளூ சட்டை, தற்போது பஞ்சாயத்துக்கு தளபதி விஜய் தொடங்கி, உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் மணிரத்தினம், தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி என அத்தனை பேரையும் பஞ்சாயத்துக்கு இழுத்திருக்கிறார்.

அதாவது ரஜினி ரசிகர்கள் இவர்களை எல்லாம் டார்கெட் செய்வதுபோல் ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார். அதில் கமலஹாசன் விக்ரம் படத்தின் வசூல் ரஜினியை ஒரே பாதித்ததால், அந்தப் படத்தின் வசூலை ஜெயிலர் படம் தாண்டி விட்டதாக ரஜினி ரசிகர்கள் கிளப்பி விட காத்திருப்பதாக இவர் சொல்லி இருக்கிறார்.

Also Read:ஜாதியை வைத்து சம்பாதிப்பது எல்லாம் ஒரு பொழப்பா.. அந்த ரெண்டு பேரை கிழித்து தொங்க விட்ட கௌதமன்

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பார்வையை நெகட்டிவாக மாற்றுவதற்காக, அவருடைய படத்தின் வசூலை மிஞ்சி விட்டதாக ரஜினி ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என ப்ளூ சட்டை சொல்லி இருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டறையர் கேரக்டரில் ரஜினி நடிக்க ஆசைப்பட்டதாகவும், மணிரத்தினம் மறுத்து விட்டதாகவும் ரஜினியை மேடையில் சொல்லி இருக்கிறார் என்று ட்வீட் செய்து இருக்கிறார் ப்ளூ சட்டை.

ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்ததால் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வசூலை தாண்டி விட்டதாக ஜெயிலர் படத்தை சொல்ல காத்திருக்கிறார்கள் என்று இவர் சொல்லி இருக்கிறார். மேலும் ராஜமவுலி படத்தின் வசூல்களையும் ஜெயிலர் தாண்டி விட்டதாக கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் சொல்வார்கள் எனக் கிளப்பி விட்டிருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் ப்ளூ சட்டை இப்படி பேசி இருப்பது அவருடைய இயலாமையைத்தான் காட்டுகிறது.

Also Read:சூப்பர் ஸ்டார் பட்டத்தால் ஓயாத அக்கப்போர், ஆண்டவர் கொடுத்த பதிலடி.. அட இது ஏன் ரஜினிக்கு தோணல!

Trending News