புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தோட அந்த படத்தை போட்டு காமிச்சிராதீங்க.. காஜலை வைத்து சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

எப்போதுமே சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு அளப்பறை கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் டாப் ஹீரோக்களை வம்பிழுத்து ஒரு பிரச்சனையை கிளப்புவார். இதற்கு சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவார்கள். இருந்தாலும் அவர் நடிகர்களை சீண்டுவதையே முழு நேர வேலையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது காஜல் அகர்வாலை வைத்து அஜித்தை கிண்டலடித்துள்ளார். ஏற்கனவே அவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் வாய்க்கால் தகராறு ஊர் அறிந்தது தான். அதில் தற்போது கிளம்பிய இந்த பிரச்சனையும் பெரும் சண்டையாக மாறியுள்ளது. அதாவது காஜல் அகர்வால் தன் மகன் குறித்து ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

Also read: விஜய், அஜித், சூர்யாவுக்கு போட்டியாக உருவாக்குவேன்.. சிம்புவுக்கு வாக்கு கொடுத்த தயாரிப்பாளர் .

அதில் தன் குழந்தைக்கு 8 வயது ஆகும் போது நான் துப்பாக்கி படத்தை போட்டு காட்டுவேன் என்று தெரிவித்தார். மேலும் அதுவரை என் குழந்தை செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இதுதான் இந்த சர்ச்சைக்கான மூல காரணமாக அமைந்துள்ளது. அதாவது அவர் கூறியதை வைத்து ப்ளூ சட்டை மாறன் அஜித்தை சீண்டும் வகையில் ஒரு மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் விவேகம் திரைப்படத்தை மட்டும் உங்கள் குழந்தைக்கு போட்டு காட்டி விடாதீர்கள் என்று பங்கம் செய்திருந்தார். ஏனென்றால் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் காஜல் பாடும் ஒரு பாடல் பலவிதமாக ட்ரோல் செய்யப்பட்டது.

Also read: ஹிட்டு, பிளாப்னு சொல்ல நீங்க யாரு.? ப்ளூ சட்டை, பயில்வனை வம்புக்கு இழுத்த வாரிசு நடிகை

இப்போதும் கூட அதை கிண்டல் அடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதை தெரிந்து கொண்ட ப்ளூ சட்டை மாறன் சரியான நேரம் பார்த்து கலாய்த்து தள்ளி இருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்துடன் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் ஆன்ட்டி இந்தியன் படத்தை விட விவேகம் ஒன்னும் மோசம் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிட்சலுவை திருமணம் செய்து கொண்ட காஜலுக்கு கடந்த வருடம் தான் ஆண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் காஜல் எதார்த்தமாக கூறிய ஒரு விஷயத்தை ப்ளூ சட்டை மாறன் சர்ச்சையாக மாற்றி இருப்பது சோசியல் மீடியாவை ரணகளமாக மாற்றி உள்ளது.

Also read: இயக்குனர்கள் கொடுத்த டார்சலால் அஜித் கைவிட்ட 5 படங்கள்.. லட்டு மாதிரி சூர்யாவிற்கு அடுத்த ஜாக்பாட்

Trending News