திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாவீரன் இந்த படத்தின் காப்பியா.? தேவையில்லாமல் உளறி வாங்கி கட்டிக் கொண்ட ப்ளூ சட்டை

Blue Sattai Maaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் படம் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படம் ஃபேண்டஸி ஆக்சன் பாணியில் காமெடி கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதனாலேயே இந்த படத்தை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். அதிலும் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பதும் ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. இப்படி படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் இப்படம் கொரியன் படத்தின் காப்பி என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியா, தோல்வியா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானாலே ப்ளூ சட்டை மாறன் ஏதாவது ஒரு குறையை சொல்லி படத்தை கழுவி ஊற்றுவார். இது காலம் காலமாக நடப்பது தான். அந்த வகையில் தற்போது மாவீரன் படத்தையும் அவர் உப்புமா படம் என்ற ரேஞ்சுக்கு கிண்டல் செய்து விமர்சித்து இருந்தார்.

அது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படம் ஹிட்மேன் ஏஜென்ட் ஜூன் படத்தின் அட்டை காப்பி என்று பதிவிட்டு இருந்தார். மேலும் இப்படத்தை காப்பி அடித்து விட்டு அதில் கொஞ்சம் மசாலா தூவி காப்பி உரிமையை பெறாமல் மாவீரன் படம் வெளியாகி இருக்கிறது எனவும் நக்கல் அடித்து இருந்தார்.

Also read: Maaveeran Movie Review- உரிமைக்கு போராடும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இதை பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். மேலும் இரண்டு படத்திலும் ஹீரோ காமிக் கார்ட்டூன் வரைபவராக இருப்பது மட்டும் தான் ஒற்றுமை. மற்றபடி இந்த இரண்டு கதைகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறி வருகின்றனர்.

மேலும் ஒரு படம் நன்றாக இருந்தால் அதை இப்படி ஏதாவது சொல்லி சொதப்பி விடுவது தான் உங்கள் வேலையா எனவும் திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி மாவீரன் படத்திற்கு எதிராக வேலை பார்த்த ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டி வருகிறார்.

Also read: மாவீரன் படத்தை தூக்கி நிறுத்திய 2 நபர்கள்.. சிவகார்த்திகேயன் எல்லாம் அப்புறம் தான்

Trending News