திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

Maaveeran Mysskin Speech: சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாப் நடிகர்கள் அனைவருக்குமே ரஜினியின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக சிவகார்த்திகேயனின் படங்களை எடுத்துப் பார்த்தால் ரஜினியின் சாயல் அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி அவரின் பெயரை வைத்து ரஜினி முருகன் என்ற டைட்டிலும் தனது படத்தில் வைத்திருந்தார்.

Also Read : விஜய் பண்ணா மட்டும் தான் தப்பா, ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. சர்ச்சையை கிளப்பும் ஜெயிலர் போஸ்டர்

இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் படத்தின் டைட்டிலும் ஏற்கனவே ரஜினி நடித்த படத்தின் பெயர் தான். மேலும் அவருடைய முந்தைய படங்களான கேடி பில்லா கில்லாடி ரங்கா, வேலைக்காரன் போன்ற படங்களும் ரஜினி படத்தின் டைட்டில் தான். அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். ஆனால் நெல்சன் எவ்வளவோ கேட்டும் ரஜினி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

இந்த சூழலில் சமீபத்தில் நடந்த மாவீரன் விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசுகையில் சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரி எல்லாம் இல்ல, ரஜினியேதான் என ஒரே போடாக போட்டார். இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் மற்ற ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கினர்.

Also Read : ரஜினி, கமல் படங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.. சாய் பல்லவி போல் தெரிந்து ஓடும் 5 ஹீரோயின்கள்

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் மிஷ்கினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதாவது ரஜினி சிறப்பாக நடித்த பிளக் அண்ட் ஒயிட் படங்கள், முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, அண்ணாமலை என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

அப்படிப்பட்ட ரஜினியுடன் சிவகார்த்திகேயனை ஒப்பிடுவது பெரும் நகைச்சுவையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி முடியல சாமி என கமெண்ட் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு என்று கண்டிப்பாக திறமை இருக்கிறது. ஆனால் வேறு ஒரு நடிகருடன் அவரை ஒப்பிடுவது தேவையில்லாத ஒன்றுதான்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : சிவகார்த்திகேயன் ஒரு குட்டி ரஜினி.. மேடையில் சொம்படிக்கும் ரஜினி பட வில்லி

Trending News