வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திடீர் தளபதி சிவகார்த்திகேயனின் அமரன் எப்படி இருக்கு.? ப்ளூ சட்டையின் நக்கல் விமர்சனம்

Blue Sattai Maran-Amaran: நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட அமரன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமான இதில் சில விஷயங்களை சேர்த்து ரசிகர்களை கவரும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பாணியில் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயனை தாக்கி பேசிய ப்ளூ சட்டை மாறன்

அதில் அவர் ஏற்கனவே இந்த கதையின் கிளைமாக்ஸ் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் படத்தை பார்ப்பது கஷ்டமாக இருந்தாலும் இயக்குனர் சிறப்பாக கதையை கொண்டு சென்றிருக்கிறார்.

அதேபோல் ராணுவ வீரராக சிவகார்த்திகேயனும் முடிந்தவரை நன்றாக நடித்திருக்கிறார். இதில் பட குழு செய்த உருப்படியான விஷயம் என்றால் சாய் பல்லவியை ஹீரோயின் ஆக தேர்ந்தெடுத்தது தான். அவரால்தான் படம் 100% சிறப்பாக வந்திருக்கிறது.

சிறு சிறு காட்சிகளில் கூட அழகாக எக்ஸ்பிரஷன் கொடுத்து கலக்கி இருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் பாராட்டி இருக்கிறார். அதே நேரத்தில் சிவகார்த்திகேயனை திடீர் தளபதி என அவர் நக்கல் அடித்து ரசிகர்களிடம் வழக்கம் போல வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலும் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்று கூறியிருக்கும் அவர் தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் இமான் விவகாரம் பற்றி சில வார்த்தைகளையும் விட்டுள்ளார். இதனால் கொதித்துப்போன ரசிகர்கள் படத்தை பற்றி மட்டும் ரிவ்யூ செய்யுங்கள். தேவையில்லாமல் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டாம் என ப்ளூ சட்டையை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

Trending News