ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜாதியை வைத்து குட்டையை குழப்பிய ப்ளூ சட்டை மாறன்.. சாட்டையடி பதிலை கொடுத்த கெளதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டு வருவதால் பட குழுவினர் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க சமூக வலைத்தளங்களில் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையே காரசாரமான பஞ்சாயத்தும் நடைபெற்று வருகிறது. அதாவது இந்த படத்தை கடுமையாக விமர்சித்திருந்த ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கௌதம் மேனன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார்.

Also read: கொடுத்த காசுக்கு மேல் கூவும் ப்ளூ சட்டை மாறன்.. அடுத்த படத்திற்கு இப்பவே கவனிக்கும் நடிகர்

அதற்கு ப்ளூ சட்டை மாறன் ஜாதியை வைத்து ஒரு பிரச்சனையை கிளப்பினார். அதாவது கௌதம் மேனன், ஜாதி வெறியின் காரணமாக தன்னுடைய பெயரை இவ்வாறு வைத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த செய்தி பரபரப்பை கிளப்பிய நிலையில் கௌதம் மேனன் தற்போது அதற்கான முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய முழு பெயரே கௌதம் வாசுதேவ் மேனன் தான். எனது சான்றிதழ்கள் மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. மின்னலே திரைப்படத்தின் போது தயாரிப்பாளர் இவ்வளவு பெரிய பெயர் வேண்டாம் சுருக்கமாக கௌதம் என்று வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.

அதை என்னால் மறுக்க முடியவில்லை. அதன் பிறகு வந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படங்கள் வரை தயாரிப்பாளர்களின் கோரிக்கை காரணமாக என்னுடைய பெயர் கௌதம் என்றே போடப்பட்டது. அதன் பிறகு வாரணம் ஆயிரம் திரைப்படம் எடுக்கும் போது அனைத்து உரிமையும் என்னிடமே இருந்தது.

Also read: அசராமல் ஜாதியை வைத்து பதிலடி கொடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. மேனன் மீது அப்படி என்ன கொலவெறி?

அது மட்டுமல்லாமல் அந்த படம் என் அப்பா சம்பந்தப்பட்ட காட்சிகளை கொண்ட ஸ்பெஷலான படம் என்பதால் நான் என்னுடைய முழு பெயரான கௌதம் வாசுதேவ் மேனன் என்ற பெயரை போட்டுக் கொண்டேன். இதுதான் உண்மையான காரணமே தவிர சிலர் கூறுவது போன்று எனக்கு ஜாதி வெறி எல்லாம் கிடையாது.

மேலும் என்னுடைய அப்பா மலையாளி, அம்மா தமிழ் அவர்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர். அதேபோன்று என்னுடைய மனைவி கிறிஸ்டியன் இப்படி இருக்கும் என்னுடைய குடும்பத்தில் ஜாதி வெறி எப்படி இருக்கும். சிலரின் சிறிய மனப்பான்மையே இப்படி ஒரு பேச்சை கிளப்பி இருக்கிறது. அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று அவர் ப்ளூ சட்டை மாறனுக்கு சட்டையடியான பதிலை கொடுத்துள்ளார்.

Also read: உயிரைக் கொடுத்து எடுத்த மணிரத்னம், சோலியை முடித்த சுஹாசினி.. கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்

Trending News