திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலை ஆதரித்து, ரஜினியை வளரவிடாமல் செய்த பாலிவுட்.. சூழ்ச்சிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்திருப்பதாக, மேடைகளில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகை கேட்டதற்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து தயாரிப்பாளரால் வெளியே அனுப்பப்பட்டதிலிருந்து, ஒரு சீன் கூட நடிக்க வரல சாப்பிடுறதுக்கு மட்டும் வந்துட்டியா என புரொடக்சனில் கேட்ட சம்பவங்கள் என ரஜினி இதுபோன்று நிறைய சந்தித்திருக்கிறார்.

அன்றைய காலகட்ட சினிமாவில் கமலுக்கு கொடுத்த அளவுக்கு வரவேற்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கமல் சினிமா பிரபலங்களால் வளர்க்கப்பட்டார். ரஜினி ரசிகர்களால் வளர்க்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ரஜினிக்கு ரசிகர்களின் ஆதரவும், வரவேற்பும் அதிகமான பிறகு தான் அவருக்கான அங்கீகாரம் சினிமாவில் கொடுக்கப்பட்டது.

Also Read:ரஜினிக்கு இது ஒன்னும் புதுசு இல்ல.. சூப்பர் ஸ்டார் பரபரப்பாக பேசிய 5 மேடைகள்

ரஜினி இதுபோன்ற அவமானங்களை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை பாலிவுட் சினிமாவிலும் சந்தித்திருக்கிறார். அப்போதைய காலகட்டங்களில் கமலுக்கு இந்தி உலகில் கிடைத்த மதிப்பும், மரியாதையும் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம் அவருடைய தோற்றம். தோற்றத்தினால் ரஜினியை ரொம்பவும் ஏளனமாக பேசி இருக்கிறார்கள்.

ஏக் துஜே கேலியே என்னும் பாலிவுட் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி அந்த மேடையிலேயே பாலிவுட் காரர்கள் தன்னை எவ்வளவு மோசமாக நடத்தினார்கள் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஹிந்தி சினிமா உலகில் பலரும் ரஜினியை மதராசி என்று பெயர் வைத்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

Also Read:ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு.. ரஜினியை ஒதுக்கி கமலை மட்டும் வளர்த்து விட்ட பாலச்சந்தர்

ரஜினிக்கு தனித்துவமே அவருடைய ஸ்டைல் தான். ஆனால் கருப்பாக இருக்கும் இவனுக்கு எல்லாம் இந்த ஸ்டைல் அவசியம்தானா என அவருடைய இயற்கையான உடல் பாவனையை பண்ண விடாமல் தடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ரஜினி மீது தங்களுடைய காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இந்தி சினிமா உலகினர்.

இந்தி பட உலகின் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூட இவனிடம் எல்லாம் எங்களால் அடி வாங்க முடியாது என்று சொல்லுவார்களாம். பலமுறை இது போன்று அவமானப்பட்ட ரஜினிகாந்த் அந்த மேடையில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். ரஜினி இப்படி வெளிப்படையாக பேசியதால் பாலிவுட் உலகத்தினர் இவர் மீது பயங்கர கோபப்பட்டு இந்தி சினிமாவில் அவரை வளர விடாமல் பண்ணியிருக்கிறார்கள்.

Also Read:40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

Trending News