இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான படைப்புகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.அந்த வகையில்,ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’படம் தற்போது கேரள பாக்ஸ் ஆபீஸில் கவனம் ஈர்த்து வருகிறது.வெளியானது முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இப்படம்,வசூலிலும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக,கேரளாவில் இப்படம் வெறும் 20 நாட்களில் 72.68 கோடி வசூலித்துள்ளதாக வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபீஸ் தகவல் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.இதன் மூலம் கேரளாவில் அதிக வசூல் செய்த பிறமொழித் படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது ‘ராமாயணா’.
இதற்கு முன்பு கேரளாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய படங்களில் ‘பாகுபலி 2’மற்றும் ‘ஜெயிலர் 2’ஆகியவை குறிப்பிடத்தக்கவை.குறிப்பாக,‘ஜெயிலர் 2’படம் ரூ.80 கோடி வசூலித்து முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.தற்போது 72.68கோடி வசூலை எட்டியுள்ள ‘ராமாயணா’,இந்தச் சாதனையை முறியடிக்க இன்னும் சில கோடிகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் உள்ளது.
மேலும், படத்தின் வசூல் இதே வேகத்தில் தொடர்ந்தால் 85 கோடி முதல் 90 கோடி வரை கேரளாவில் மட்டும் வசூலிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி நடந்தால்,கேரள பாக்ஸ் ஆபீஸில் புதிய வசூல் சாதனையை இப்படம் உருவாக்கும்.
மொத்தத்தில்,கேரள ரசிகர்களின் ஆதரவுடன் வசூல் வேட்டையைத் தொடர்ந்து வரும் ‘ராமாயணா’,அடுத்ததாக எந்தப் படத்தின் சாதனையை முறியடிக்கப் போகிறது என்பதுதான் தற்போது சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




