சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விராட் கோலி இத செஞ்சா இந்தியாக்கு தான் உலகக் கோப்பை.. அட பிரைன்லாரா சொல்லுவது உண்மைதாங்க

விராட் கோலி எப்பொழுதும் இறங்கும் ஒன் டவுன் பொசிஷனில் இருந்து இந்த உலகைக்கோப்பையில் ரோஹித்துடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு ஒப்பனராக களம் இறங்கி வருகிறார். இது அவருக்கு முற்றிலும் கை கொடுக்காத ஒரு விஷயமாக தற்போது மாறி உள்ளது..

வழக்கத்திற்கு மாறாக விளையாடி விராட் கோலி விக்கெட்டை எளிதில் பறிகொடுத்து வருகிறார். அவர் ஒன் டவுன் களம் இறங்கினால் ஆடுகளத்தின் தன்மையும் பந்துவீச்சாளர்களின் எண்ணம் போன்றவற்றை தெளிவாக கணித்து விளையாடலாம். இப்பொழுது அதைச் செய்யாமல் முற்றிலுவதுமாக தன் திறமையை வீணடித்து வருகிறார்.

இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி மொத்தமாய் விளையாடிய 4 போட்டிகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் இவர் விளையாடியதை பல முன்னால் வீரர்கள் மிகவும் மோசமாக சித்தரித்து வருகிறார்கள்.

விராட் கோலிக்கு வயதாகிவிட்டது அதனால் இவர் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடினால் நன்றாக இருக்கும் . ஓப்பனிங் விளையாட தகுதியற்ற வீரர் இவர், என முன்னால் ஜாம்பவான்கள் கூறி வருகிறார்கள். குறிப்பாக பிரைன்லாரா விராட் கோலிக்கு சில அறிவுரைகள் கூறியிருக்கிறார்.

பிரைன்லாரா சொல்லும் உண்மை

விராட் கோலியை பொருத்தவரை ஆட்டத்தில் கொஞ்சம் நீதானம் காட்டினால் கடைசி வரை விளையாடக்கூடிய திறமை படைத்தவர். களத்தில் ஒரு சில ஓவர்கள் நின்று கணித்து விட்டால் இவரை அவுட் ஆக்குவது கடினம். ஆட்டத்தையும் கடைசி வரை போராடி வெல்லக் கூடிய வீரர் இவர். அதனால் இவர் ஒன் டவுன் இறங்கினால் இந்தியாவிற்கு உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்

Trending News