வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டெஸ்ட் போட்டியை T20 போல் மாற்றிய ரோகித் அண்ட் கோ.. பிரகாசமாய் தெரியும் வெற்றி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆரம்பித்த முதல் நாளிலிருந்து மழை குறுக்கிட்டதால் மூன்று நாட்கள் போட்டி சரியாக நடைபெறவில்லை.

டாசில் வென்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை முதலில் களமிறங்குமாறு கேட்டுக் கொண்டது. முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் பங்களாதேஷ் அணி 107 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறவில்லை. மழை குறுக்கிட்டதாலும், மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததாலும் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

நான்காம் நாளான இன்று வெயில் நன்றாக அடித்ததால் ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தனது முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 233 ரண்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி இது டெஸ்ட் போட்டியா இல்லை 20 ஓவர் போட்டியா என்றே தெரியாமல் அதிரடியாக விளையாடியது.

பிரகாசமாய் தெரியும் வெற்றி

10 ஓவருக்குள் நூறு ரன்களை கடந்தது, 34.4 ஓவர்களில் 285 ரண்களுக்குள் 9 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 52 ரன்கள் முன்னிலை பெற்றது. பங்களாதேஷ் தரப்பில் ஸ்பின் பவுலர்கள் மட்டும் ஒன்பது விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

எப்படியும் ஸ்பின் பால் ஆதிக்கம் பலமாக இருக்கும் என நம்பி இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணியை எளிதாக சுருட்டலாம் என தொடர்ந்து ஆடி வருகிறது. 52 முன்னிலை ரண்களும் ஐந்தாவது நாள் ஸ்பின் ஆதிக்கவும் மீதமுள்ள நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்து வருகிறது.

Trending News