செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

பேட்டிங் சாதனையை கூகுள் பண்ண சொன்ன பும்ரா.. ஓட்டம் பிடித்த ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர்

ஆஸ்திரேலியா அணியினர் பும்ராவின் பந்துவீச்சுக்கு தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். மூன்றாவது டெஸ்டில் மற்றும் ஓரளவு தாக்குப் பிடித்த அந்த அணியினர் தொடர்ந்து பும்ராவை சீண்டி வருகின்றனர். தற்சமயம் அவரிடம் வாய் கொடுத்த ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர் செமையாக வாங்கிக் கொண்டார்.

எப்பொழுதுமே மற்ற அணி வீரர்களின் செயல்பாடு நன்றாக இருந்தால் ஆஸ்திரேலியா அணியினர் அதை ஒத்துக் கொள்வதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள். இந்த முறையும் அதேபோல் பும்ரா வீசுவது முறையான பந்து வீச்சு இல்லை என பேசி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் பும்ராவை பார்த்து, பேட்டிங் செய்ய வரும்பொழுது மைக்கேல் ஸ்டார்க் பந்துவீச்சை பார்த்து நீங்கள் பயப்படுவீர்களா என்று கேட்டதற்கு அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்தது யார் என்று கூகுள் பண்ணி பார்க்க சொல்லியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த சாதனை பும்ரா கைவசம் தான் இருக்கிறது. ஒரே ஓவரில் 29 கண்களை வீணாசியுள்ளார் அவர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டுவர்ட் போர்டு வீசிய ஓவரில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பும்ரா.

அந்த ஓவரில் 4- 6-4-4-4-6-1 என பும்ரா பேட்டில் மட்டும் இருந்து 29 ரன்கள் வந்தது . இதற்கு முன்னர் அதே ஓவரில் வைட் மூலம் ஐந்து ரன்களும் நோபால் மூலம் ஒரு ரன்னும் என மொத்தமாய் 35 ரன்கள் வந்தது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த ஓவர்.

- Advertisement -

Trending News