Trisha: திரிஷாவுக்கு தற்போது 41 வயது ஆனாலும் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். ரஜினி, அஜித், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் சில காலம் தமிழ் சினிமாவை தவிர்த்துவிட்டு அக்கட தேச மொழி படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செலவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமா த்ரிஷாவை கொண்டாட தொடங்கியது. விஜய், அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் த்ரிஷா நடிக்க ஆரம்பித்தார்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்த நிலையில் இப்போது குட் பேட் அக்லீ படத்திலும் திரிஷா தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி கொடிகட்டி பறக்கும் த்ரிஷா ஓவர் நைட்டில் தான் ஹீரோயின் ஆனார் என்பதை நடிகர் ராதாரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
திரிஷா ஹீரோயின் ஆனது எப்படி என்று கூறிய பிரபலம்
அதாவது லேசா லேசா படப்பிடிப்பின் போது அந்த படத்தில் நடிக்க இருந்த ஹீரோயின் மும்பையில் இருந்து வர வேண்டும். சில காரணங்களினால் அந்தப் பெண் வர முடியவில்லை. இந்த சூழலில் அங்கிருந்த ஆறு, ஏழு பெண்களில் திரிஷா நல்லா இருந்ததால் அவரை ஹீரோயினாக போட்டார்கள்.
இதனால் ஒரே நைட்டில் திரிஷா ஹீரோயினாக மாறிவிட்டார். வாழ்க்கையில் எல்லாமே டக்கு டக்கு என்று மாறும். இதுதான் விதி என்று எழுதப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று ராதாரவி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் மும்பையில் இருந்து அந்த நடிகை வராததனால் மிகவும் திறமையான நடிகை திரிஷா தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இன்னும் த்ரிஷா கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார்.