வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விக்ரம் படம் ஒன்னும் கமலால ஓடல.. ரஜினியை மிஞ்சிட்டோமுன்னு நினைக்கவே கூடாது ஏன் என கூறும் பிரபலம்

Kamal-Rajini: சமீபத்தில் கமல் நடிப்பில் பட்டைய கிளப்பிய படம் தான் விக்ரம். இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடினார்கள் என்றே கூறலாம். அவ்வாறு இருக்க இப்படத்தின் வெற்றி கமலால் உருவானது அல்ல என புட்டு புட்டு வைத்த பிரபலம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி படமாய் அமைந்தது. லோகேஷ் மேற்கொண்ட புது முயற்சிக்கு இப்படம் நல்ல வசூலை பெற்றுத் தந்தது என்றே கூறலாம்.

Also Read: ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் நெல்சனின் மனைவி.. ட்ரெண்டாகும் குடும்ப புகைப்படம்

எந்த விதத்திலும் சலிப்பு தட்டாத அளவிற்கு படம் முழுக்க சுத்த விட்டு அடிக்கும் கமலின் நடிப்பு இப்படத்தில் பெரிதாக பார்க்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியை கொண்டே தன் அடுத்த கட்ட படங்களை மேற்கொண்டு வருகிறார் கமல். நடிப்பு மட்டுமல்லாது தயாரிப்பையும் மேற்கொள்ளும் இவரின் இந்தியன்2 படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்தியன் 2, கே ஹெச்233, கல்கி 2898AD போன்ற அடுத்தடுத்த பல படங்களை கைவசம் வைத்து வரும் கமலின் நடிப்பால் ஒன்றும் விக்ரம் படம் வெற்றி பெறவில்லை என தயாரிப்பாளர் கே ராஜன் தன் கருத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு முன்பு கமல் ஏற்ற எல்லாம் படங்களும் வெற்றி பெற்றதா, தோல்வி என்பதே இல்லையா எனவும் கேள்வியை முன் வைத்தார்.

Also Read: இந்த வருடம் வெளியான 5 படங்களின் முதல் நாள் வசூல்.. நம்பர் ஒன் இடத்தை விட்டுக் கொடுக்காத சூப்பர் ஸ்டார்

இப்படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜ் இருக்கே சேரும் எனவும். இப்படத்தின் வெற்றியை கொண்டு கமல் ரஜினியை மிஞ்சிட்டோமுன்னு எண்ணியதில்லை, என்னவும் மாட்டார், என்னவும் கூடாது எனவும் பேசி உள்ளார். ஆனால் தற்பொழுது வெளியாகிய ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினியை சேர்ந்ததாகவும் கூறி நெகிழ்ந்தார்.

மேலும் அவர்கள் இருவரிடையே ஒரு பொழுதும் போட்டு இருந்ததில்லை. அவர்களைப் பற்றி நாம் தான் பேசி பேசி போட்டியாக எண்ணி வருகிறோம். அவர்கள் இருவரும் அவரவர் வெற்றியை தான் கொண்டாடி வருகின்றனர். இடைப்பட்ட வேளையில் அவற்றைத் தூற்றி பெரிதாக்குவது சோசியல் மீடியாவும், நாமும் தான் என தன் கருத்தை வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் கே ராஜன்.

Also Read: உதயநிதி இடம் தோற்றுப் போன கலாநிதி மாறன்.. சன் பிக்சர்ஸால் முடியாததை செய்து காட்டிய ரெட் ஜெயண்ட்

Trending News