சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

3 தலைமுறைகளுடன் நடித்த மகா கலைஞன்.. கமலுக்கு மட்டும் கிடைக்காத பாக்கியம்

Actor Kamal: உலக நாயகன் கமலஹாசன் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கமலே தன் படத்தில் இந்த மகா கலைஞன் நடிக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகர் ஒருவர். அதாவது மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

விசு காலத்திலேயே தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எது கொடுத்தாலும் தனது பாணியில் கலக்கியுள்ளார். இவரை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தனக்கென சில கட்டுப்பாட்டுகளை நடிகர் விதித்துக்கொண்டார்.

Also Read : 80ல் கமல் தெறிக்கவிட்ட 5 பாலிவுட் படங்கள்.. நம்ம பொழப்பு போயிடும்னு ஓரங்கட்ட போட்ட சதி தெரியுமா?

இந்நிலையில் ரஜினியுடன் நிறைய படங்களில் நடித்த இவர் கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்பட்ட பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் ரகுவரன் மிரட்டி இருப்பார். இன்று வரை இந்த கதாபாத்திரம் பேசப்படுவதற்கான காரணம் ரகுவரன் மட்டுமே.

விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த ரகுவரன் அதன்பிறகு ரஜினி உடன் நடித்தார். இதைத்தொடர்ந்து மூன்றாவது தலைமுறையான தனுஷ் உடனும் யாரடி நீ மோகினி என்ற படத்தில் ரகுவரன் நடித்திருந்தார். ஆனால் கமலுடன் மட்டும் ரகுவரன் நடிக்காதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

Also Read : கமலஹாசன் கூட நடித்ததற்கு செவுலில் பளார் வாங்கிய நடிகை.. அல்ட்ரா மார்டன் ஆக்டரை வச்சு செய்து உலக நாயகன்

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் படத்தில் நாசர் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் ரகுவரனை தான் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். ஆனால் ரகுவரனை பொறுத்தவரையில் தன்னுடைய படங்களில் நீண்ட முடியுடன் தான் நடித்திருப்பார். ஆனால் நாயகன் படத்தில் போலீஸ் கெட்டப் என்பதால் முடியை வெட்ட சொல்லி இருக்கிறார் மணிரத்தினம்.

அது என்னால் முடியாது என ரகுவரன் நாயகன் படத்தை மறுத்துவிட்டார். அதன் பிறகு கமலுடன் இரண்டு, மூன்று வாய்ப்புகள் வந்த போதும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கடைசி வரை உலகநாயகனுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. ரகுவரனுடன் நடிக்கும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என்பதை கமலே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

Also Read : ரகுவரனின் இறுதி நிமிடங்கள்.. மரணத்திற்கான உண்மையான காரணத்தை போட்டு உடைத்த ரத்த சொந்தம்

Trending News