ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்த கட்டம் கொடூர மரணம் என கைவிட்ட மருத்துவர்கள்.. தன்னம்பிக்கையோடு ஜெயித்த 5 சினிமா நட்சத்திரங்கள்

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு நிறைய மனிதர்களை கேள்விப் பட்டிருப்போம் ஆனால்  பார்த்திருக்க மாட்டோம்.ஆனால் பிரபலங்களுக்கு எந்த ஒரு நோய் வந்தாலும் அந்த நோய் பிரபலமாகி விடும். அதைப்பற்றி விழிப்புணர்ச்சியும் நமக்கு இயல்பாக ஏற்பட்டுவிடும். நல்ல நிலையில் இருக்கும்போது பிரபலங்கள் இதனால் இறந்தும் போயிருக்கிறார்கள்.ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையுடன் இருந்து அதிலிருந்து மீண்டு தற்போது நல்ல நிலையில் வாழ்ந்து வரும் முக்கிய பிரமுகர்களை பற்றி காணலாம்.

கௌதமி: இவர் சினிமாவில் அனைத்து முக்கிய நடிகர்களுடன் நடித்து வந்தவர். புகழின் உச்சியில் இருக்கும் பொழுதுநல்ல இருக்கும் போது மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. ஆனால் மனம் தளராமல் தைரியமாக இவரே தன்னிச்சையான செயல்களை செய்து இவருக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொண்டு. மன தைரியத்துடன் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். தற்போது இவர் நல்ல நிலையில் பொது வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் சிறப்பாக ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார்.

Also Read: உடல் ரீதியான பிரச்சனை கொண்ட 5 நடிகைகள்.. கொடும் நோயால் பாதிக்கப்பட்ட ஷங்கர் பட நடிகை

மனிஷா கொய்ராலா: இவரும் சினிமாவில் மார்க்கெட் இருக்கும் பொழுது இவருக்கு வயிறு சம்பந்தமான புற்றுநோய் ஏற்பட்டது. பின்னர் இந்தியாவில் முக்கியமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை தெரிந்ததும் இவர் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று தற்பொழுது மீண்டு வந்து விட்டார். இப்போது முக்கியமான டிவி நிகழ்ச்சிகளிலும், புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு செயலிலும் ஈடுபட்டு வருகிறார்.

மம்தா மோகன்தாஸ்: கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆனால் திடீரென்று சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் காரணம் தோல் சம்பந்தமான புற்றுநோய் ஏற்பட்டது. இந்த புற்றுநோய் சரி செய்யலாம் ஆனால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.இவர் பொறுமையாக இருந்து சரி செய்துஏற்பட்டு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு பல முக்கிய நிகழ்ச்சிகளில், ஒரு சில சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

Also Read: தீய பழக்கங்களால் சாவின் விளிம்பிற்கு சென்ற 5 நடிகைகள்.. இந்த ஒரு நோயால் இறந்து போன ஶ்ரீவித்யா

சோனாலி பிந்த்ரே: இவர் 90ல்தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அப்போ உள்ளவர்கள் யாரும் மறக்க முடியாது.நன்றாக இருக்கும் போது காணாமல் போன நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கு 2018 ஏற்பட்ட மோசமான புற்றுநோய் 30% உயிர் பிழைக்க முடியும் என்று சொன்ன பிறகு இந்தியாவில் சிகிச்சை பெற்றால் சரிவராது என்று அமெரிக்காவுக்கு சென்று இரண்டு வருடம் தங்கி அதை சரி செய்து வெற்றி பெற்று வந்தார். இப்பொழுதுஇந்தியாவில் சிகிச்சை பெற்றால் சரிவராது என்று அமெரிக்காவுக்கு சென்று இரண்டு வருடம் தங்கி அதை சரி செய்து வெற்றி பெற்று வந்தார்.நடிப்பது இல்லை ஆனால் புற்றுநோய் சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

விசு: இவர் 80 மற்றும் 90களில் இவரது படங்களை யாரும் மறக்க முடியாது. இவரது குரலும் யாருக்கும் தெரியாமல் இருக்காது.2010ல்தொண்டை சம்பந்தமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு சில வருடங்கள் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.பல வருடங்கள் கழித்து சிறுநீரக பிரச்சினைகளால் அவர் இன்று உயிருடன் இல்லை. ஆனால் புற்றுநோய் இருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்த விஷயங்களாக இருந்தாலும் இதில் என்ன புதுமை என்றால் இவர்கள் அனைவரும் இன்று அதனை இது புற்று நோயை எதிர்கொண்டு நல்லமுறையில் புற்று நோய் இல்லாமல் வாழ்ந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் அதிக பணம் வந்தாலும் தன்னம்பிக்கைதான் இவர்களைக் காப்பாற்றியது என்பது உண்மை.

Also Read: பலான தொழில் செய்து சிக்கி சீரழிந்த 5 நடிகைகள்.. சினிமாத்துறைக்கு வந்த கெட்ட பெயர்

Trending News