38 வயசு ஆய்டுச்சு, பழைய யுக்திகள் ஒன்றும் இல்லை, இளம் வீரர்கள் பெஞ்சில் இருக்கிறார்கள், வேர்ல்ட் கப் போட்டிகள் நெருங்குகிறது, என அடுத்தடுத்த காரணங்களால் இப்பொழுது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
20 ஓவர் உலகக் கோப்பையில் இளம் அதிரடி வீரர் போல் மற்ற அணிகளை பந்தாடிய ரோகித் சர்மாவிற்கு இப்பொழுது நேரமே சரியில்லை. ஆஸ்திரேலியா டூர் ஆரம்பித்ததில் இருந்து அவர் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகள். தொடர்ந்து 20 போட்டிகளுக்கு மேல் சோபிக்க வில்லை, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இனிமேலும் அணிக்குள் இருந்தால் தேவையற்ற தண்டம் ஆகிவிடும் என்ற கண்ணில் அவரை முன்னாள் வீரர்கள் மட்டுமில்லாமல், பிசிசிஐ நிர்வாகிகளும் பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவரை, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஒதுக்க காரணம் தேடி வருகிறார்கள்.
2027 இல் நடக்கவிருக்கும் அடுத்த உலக கோப்பை போட்டிகளில் நிச்சயமாக அவர் விளையாட மாட்டார். சச்சின், தோனி போன்ற வீரர்கள் 40 வயதிலும் பிட்னஸ் காட்டி விளையாடி வந்தனர். ஆனால் தொடர்ந்து ரோகித் சர்மாவின் பிட்னஸ் மற்றும் பார்ம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் கூடிய விரைவில் அவர் அணியில் இருந்து ஒதுக்கப்படுவார். இப்பொழுது அடுத்த மூன்று வீரர்கள் அண்ணன் எப்பொழுது கிளம்புவார் திண்ணையை பிடிக்கலாம் என காத்து கிடக்கிறார்கள். ரோஹித்துக்கு பின் சூரிய குமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, பூம்ரா என அடுத்த லிஸ்டில் மூன்று பேர் வெயிட்டிங்.