அமலாக்கத்துறை கையில் சிக்க போகும் 3 படங்கள்.. உஷாரா சிம்பு அடித்த சம்மர் சால்ட்

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் சமீபத்தில் ED ரெய்டில் சிக்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடம்பாக்கத்தில் இந்த விவகாரம் தான் அனைவரையும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரனை தான் இப்பொழுது அமலாக்கத்துறை சுற்றிவழித்துள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவு படங்கள் எப்படி தயாரிக்க முடியும் என டான் பிக்சர்ஸ் மீது கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் இவர்கள் ஏழெட்டு தமிழ் படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளனர்.

டான் பிக்சர்ஸ் முறைகேடாக பணத்தை சம்பாதித்து அதைத்தான் சினிமாவில் இறக்கி “ஒயிட் மணியாக” மாற்றுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள் என அமலாக்கத்துறை அவர்கள் மீது கட்டம் கட்டி விசாரணையில் இறங்கியுள்ளது. அவர்களால் மூன்று பெரிய படங்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தயாரிப்பில் இட்லி கடை, பராசக்தி படங்கள் உருவாகிக்கொண்டிருக்கிறது, அதுபோக எஸ் டி ஆர் 49, இதயம் முரளி, விக்ரம் நடிப்பில் உருவாக போகும் அடுத்த படம் என வரிசை கட்டி நிற்கிறது. இப்பொழுது இந்த படங்கள் அனைத்தும் டேக் ஆஃப் ஆகுமா என்று தெரியவில்லை. இதில் பராசக்தி மற்றும் இட்லி கடை படங்கள் மாட்டிக்கொண்டுள்ளது.

பராசக்தி படத்தின் சூட்டிங் ஸ்ரீலங்காவில் நடந்து வருகிறது. அங்கே அவர்களுக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு கூட பில் கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். அதேபோல் இட்லி கடை படமும் பிரச்சனையில் மாட்டி உள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

உஷாராக சிம்பு மற்றும் இதில் தப்பித்துள்ளார். அவர் தற்போது வரை அந்த நிறுவனத்திடம் தனது 49 வது படத்தை தயாரிப்பதற்கு பேச்சுவார்த்தை மட்டும் தான் நடத்தியுள்ளார். படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதனால் பிரச்சனை வேண்டாம் என்று வேறு ஒரு தயாரிப்பாளரை தேடி வருகிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →