Vijay: மக்களுக்காக மக்கள் பணி செய்ய விஜய் காத்திருக்கும் வேளையில், அவரை சுற்றி இருப்பவர்களை அதற்கு ஆப்பு வைத்து விடுவார்கள் போல. உங்களுக்கு ரொம்ப பிடித்தவர்கள் மீது விசுவாசத்தை காட்ட நீங்கள் செய்யும் வேலை அவருக்கே பிடிக்காமல் போய்விடும் என விஜய் சில வருடங்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தார்.
அப்படி இருந்தும் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் எல்லை மீறிய வேலைகளை செய்து விடுகிறார்கள். அப்படி ஒரு விஷயத்தை தற்போது ஆதாரத்துடன் எடுத்து தமிழக வெற்றி கழகத்திற்கு தயவு செய்து ஓட்டு போடாதீர்கள் என பிரச்சாரம் செய்யும் அளவுக்கு போயிருக்கிறது.
நேற்றைய தினம் நடிகை சரோஜாதேவி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்து விட்டார். இவருக்கு பல நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தார்கள். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரோஜா தேவிக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
அவருடைய போஸ்டில் போய் ரொம்பவும் அருவருக்கத் தக்க வகையில் நீங்க எப்போ டிக்கெட் வாங்குவீங்க என கமெண்ட் செய்திருக்கிறார் ஒருவர். அதிலும் விஜயின் பெயரை தன்னுடைய ஐடியில் வைத்துக் கொண்டு விஜய் ரசிகராக தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கும் நபர் தான் இந்த வேலையை செய்திருக்கிறார்.

ஒரு சின்ன தையல் பல கிழிசல்களை தவிர்த்து விடும் என்ற பழமொழி இருக்கிறது. அப்படி ஒரு தையல் தான் தற்போது விஜய் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தேவைப்படுகிறது.
விஜய்யின் பெயரை தங்களுக்கு அடையாளமாக வைத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் விஷம வேலைகள் பார்ப்பது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய அடியாக அமையும். இப்படிப்பட்ட ஆதரவாளர்களைக் கொண்ட, இப்படிப்பட்ட ரசிகர்களைக் கொண்ட தலைவரையா நாம் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்களே கூட யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
விஜய் சொன்ன மாதிரி அவர் மீது இருக்கும் விசுவாசத்திற்காக சிலர் செய்யும் இந்த வேலைகள் அவருக்கே வெறுப்பை உருவாக்கும். இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த மாதிரி தான் என காட்டுவதற்காக நிறைய பேக் ஐடிகள் உருவாக்கப்பட்டு தங்களை விஜய் ரசிகராக சித்தரித்துக் கொண்டு அருவருக்கத்தக்க வேலைகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது