Vijay: நடிகர் விஜய் லாக்கப் மரணங்களை எதிர்த்து நேற்று நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ட்விட்டரில் வேறொரு வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் மற்றும் விஜய் இருவரும் சம காலத்து போட்டியாளர்கள் என்பதாலேயே இவர்கள் எல்லா விஷயத்திலும் ஒப்பிட்டு பார்ப்பது என்பது இயல்பாக நடக்க கூடிய ஒன்று. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக வெயிலில் விஜய் நின்று பேசியது அவருடைய ஆதரவாளர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
என்ன பாஸ் இதெல்லாம்?
அதே நேரத்தில் கார் ரேஸில் கலந்து கொண்டு பிசியாக இருக்கும் அஜித் பூனை ஒன்றுடன் விளையாடும் வீடியோ வெளியானது. அஜித் தன்னுடைய கைகளில் ஒரு பூனையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சி விளையாடுகிறார்.
என்னுடன் நீ சென்னைக்கு வருகிறாயா என்று கேட்கிறார் அதற்கு அந்த பூனை ஏதோ சைகை செய்கிறது. அதை கொஞ்சிக் கொண்டே சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோவை ஒப்பிட்டு விஜய் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார், அஜித் பூனைகளுடன் விளையாடுகிறார் என விமர்சனங்கள் எழுதியிருக்கிறது.

நிதர்சனமான உண்மை என்னவென்றால் விஜய் மக்களுக்காக மக்கள் பணி செய்ய களம் இறங்கி இருக்கிறார். அவர் ஆர்ப்பாட்டம், போராட்டம், மக்களை சந்திப்பது, மாநாடு என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும்.
அதே நேரத்தில் அஜித் சினிமா மற்றும் கார் ரேசிங்கில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு காலகட்டத்தில் சமகாலத்து போட்டியாளர்களாக இருந்தார்கள் என்ற காரணத்திற்காக இருவரையும் ஒப்பிடுவது என்பது நியாயமாகாது.