இதுவரை சினிமா துறையில் இருந்து போன MP-க்கள் மாதிரி இல்ல.. இத்தனை முன்னேற்பாடுகளுடன் டெல்லி போகிறாரா கமல்!

Kamal Haasan: நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் நாளை பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க இருக்கிறார். எங்கும் வித்தியாசம், எதிலும் வித்தியாசம் என இருப்பவர் தான் கமல். அதை பாராளுமன்றம் வரை கொண்டு செல்ல இருப்பதாக தெரிகிறது.

கட்சி ஆரம்பித்து எட்டாவது வருடத்தில் ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்கிறார் கமல். இதுவரை போன எம்பிக்கள் போல் ஒரு வாரம் பாராளு மன்றத்தில் உட்கார்ந்து விட்டு பின்னர் சம்பளத்தை மட்டும் வாங்கும் எம் பி ஆக கமல் இருக்கப் போவதில்லை.

பல முன்னேற்பாடுகளுடன் டெல்லி போகும் கமல்

பல திட்டங்களை கையில் வைத்துக் கொண்டு தான் டெல்லி புறப்பட்டு இருக்கிறார். அதாவது சினிமா துறைக்கு இந்த அரசால் என்னென்ன செய்ய முடியும் என்பதை விசாரித்து அதை எல்லாவற்றையும் பாராளுமன்றத்தில் பேச இருக்கிறார்.

மேலும் தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுக்க இருக்கிறார் கமல். சும்மா போனோம் வந்தோம் அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கினோம் என்று இல்லாமல் கமல் வழக்கம் போல தன்னுடைய பாணியை பாராளுமன்றத்திலும் காட்டுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.