சினிமா செய்திகள்

வாழும் ரகுவரனாக சினிமாவுக்கு கிடைத்த ஆக்டர்.. இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என மிரளவிடும் நடிப்பு அரக்கன்

நடிப்பதற்கு என்று அவதாரம் எடுத்து பிறந்தது போல் நடிப்பின் மீது தீராத காதல் கொண்டு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்கள்.

By Arun · 29 ஜூன் 2023 · Updated 09 மே 2025
Raghuvaran

Actor Raghuvaran: சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் தங்களுடைய நடிப்பால் ரசிகர்களை மிரண்டு போக செய்யும் திறமை உடையவர்கள். நடிப்பதற்கு என்று அவதாரம் எடுத்து பிறந்தது போல் நடிப்பின் மீது தீராத காதல் கொண்டு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சொல்லலாம். இமேஜ் பார்க்காமல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவர் நடித்து விடுவார்.

அதன் பின்னர் தமிழ் சினிமா ரசிகர்கள் இரண்டு பேர் பார்த்த நடிகர் என்றால் அது ரகுவரன் தான். 90 கிட்ஸ்கள் பார்த்து பயந்து போன வில்லன் தான் இவர். ஆனால் மற்ற வில்லன்களைப் போல உடல் கட்டமைப்பு எல்லாம் இல்லாமல், தன்னுடைய குரலை மட்டுமே வைத்து மிரட்டி எடுத்தவர். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனமாக நடித்துக் கொடுப்பவர் இவர்.

ரகுவரனின் மறைவிற்குப் பிறகு அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாமல் தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த நடிகர் நடிக்கும் படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது அப்படியே ரகுவரனின் வெறித்தனமான நடிப்பு தான் தெரிகிறது. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான வித்தியாசம் காட்டுவதில் இவரை மிஞ்ச தற்போது சினிமாவில் ஆள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பகத் பாசில் , அதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் யார் இந்த நடிகன் இப்படி நடிக்கிறான் என்று ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தது. அந்த படத்தில் சமந்தாவின் கணவராக வரும் இந்த கேரக்டரில் வேறு யாரு நடித்திருந்தாலும் இப்படி வெற்றி அடைந்து இருக்காது.

அதன் பின்னர் இவர் நடித்த திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தில் ஏஜென்ட் அமர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுக்கு இடையே பகத் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் தனியாக தெரிந்தார். அதுவரை மம்முட்டி, ஜெயராம் போன்று ஒரு மலையாள நடிகர் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் என்ற எண்ணத்தை தாண்டி இவருடைய அடுத்த படம் எப்போது தமிழில் ரிலீஸ் ஆகும் என்று ஏங்க வைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது பகத்பாசில் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்ட பேட்டியில் இவரைப் பற்றி சொன்னதிலிருந்து இவருக்கு சினிமா மீது எப்படி ஒரு தீராத காதல் இருக்கிறது என்பது தெரிகிறது. ரகுவரன் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றது போல தன்னுடைய குரலை கூட மாற்றி நடிப்பாராம். அதே போன்று தான் பகத் கூட. தன்னுடைய முந்தைய படங்களில் சாயல் இல்லாத அளவிற்கு தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்து நடிக்கிறார்.