கூலி படத்தில் நடிக்க ஓவரா பிகு பண்ணிய ஹீரோ.. 10 நிமிஷத்தில் ஒகே சொன்ன சகலகலா வல்லவன்!

Coolie: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா ராவ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, மஞ்சுமல் பட நடிகர் சௌபின் சாஹிர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்த படத்தில் நடிக்க அக்கட தேசத்து நடிகர் ஒருவர் ஓகே சொல்லவே ஏழு மாதங்கள் டைம் எடுத்த விஷயம் தற்போது வெளியில் வந்திருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூலி படம் குறித்தும் தன்னுடைய அடுத்த அப்டேட்டுகள் குறித்தும் பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஓவரா பிகு பண்ணிய ஹீரோ

அதில் கூலி படத்தை பற்றி பகிர்ந்த தகவலில் தான் இதை சொல்லி இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் கதையை நடிகர் சத்தியராஜ் இடம் சொன்னபோது பத்து நிமிடத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா ஓகே சொல்ல கிட்ட தட்ட 7 மாதங்கள் எடுத்துக் கொண்டாராம். ஒரு காலகட்டத்தில் ஒரு சில தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன் பின்னர் ஒரு மிகப்பெரிய பிரேக் ஏற்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கு அவர் யோசித்ததில் தவறே இல்லை என்றுதான் தோன்றுகிறது.