இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்.. அதுல தான் ஏமாந்துட்டோம், பிரமோஷன் பரிதாபங்கள்

Thug Life: ஒரு படம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்றால் பிரமோஷன் ரொம்பவும் முக்கியம். ஆனால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் காசை தண்ணியாக செலவு செய்து படத்தை ப்ரமோட் செய்கிறார்கள்.

உண்மையில் தரமான படமாக இருந்தால் எந்த விளம்பரமும் தேவையில்லை. இப்படி தமிழில் ஜெயித்த ஏராளமான படங்கள் இருக்கிறது. ஆனால் தற்போது கோடி கணக்கில் செலவு செய்து பிரமோஷன் செய்து வருகின்றனர்.

படம் அந்த அளவுக்கு இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் அது கேள்விக்குறி தான். அப்படித்தான் பெரிய ஹீரோக்களின் படங்கள் தாறுமாறாக ப்ரமோஷன் செய்து மொக்கை வாங்கி வருகிறது. அதை பற்றி காண்போம்.

பிரமோஷன் பரிதாபங்கள்

இதில் ப்ரோமோஷன் செய்யும்போது எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை படம் வேற லெவலில் வந்திருக்கு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

அதேபோல் படத்தில் நடித்திருக்கும் மற்ற பிரபலங்கள் ஹீரோவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். இந்த அளவுக்கு அவர் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிட்டார்.

இப்படி பல உருட்டுகள் உண்டு. அதில் சமீபத்தில் கங்குவா படம் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. நிச்சயம் படம் ஆயிரம் கோடி அடிக்கும். இதே மாதிரி சக்சஸ் மீட் நடக்கும் என்று தயாரிப்பாளர் கூறினார்.

ஆனால் படம் பல்பு வாங்கியது. அதேபோல் ரெட்ரோ பட ப்ரமோஷனும் வேற லெவலில் இருந்தது. கடைசியில் டூரிஸ்ட் ஃபேமிலி சத்தம் இல்லாமல் வந்து கலெக்ஷன் பார்த்தது.

அதை அடுத்து தக் லைப் புரோமோஷனில் இந்த நான்தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு வசனத்தை பேசி காட்டினார். அதேபோல் கமல் கூட ரசிகர்களை கவரும் வகையில் பேசினார்.

படம் ரிலீஸ் ஆகும் முன்பு வரை இந்த அலப்பறை அதிகமாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்த பலரும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை.

இப்படி ப்ரோமோஷனில் அதிகப்படியாக அளந்து விடுகின்றனர். இதை நம்பி செல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இதை ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு கிண்டல் அடித்துள்ளார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →