Cinema : 2001-ல் வெளியான “சிட்டிசன்” தமிழ் சினிமா ரசிகர்களிடையே கல்ட் ஸ்டேட்டஸ் பெற்ற படம். பல்வேறு வேடங்களில் அஜித் நடித்த இந்த படம் அப்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தின் முதன்மை சாய்ஸ் அஜித் அல்ல, உலகநாயகன் கமல்ஹாசன் என்பதுதான் புதிய தகவல்!
இயக்குநர் சரவண சுப்பையா சமீபத்தில் பகிர்ந்த தகவலின் படி, “சிட்டிசன்” படத்தில் 8 வெவ்வேறு வேடங்களில் நடித்த ஹீரோவாக முதலில் கமல்ஹாசன் இருக்க வேண்டும் என தயாரிப்பு குழுவில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
“படத்துக்கு கதையை கேட்ட உடனே கமல்ஹாசன் சார் பெயர்தான் எல்லாரின் மனதில் வந்தது. அவரின் வேடமாற்ற திறமை, கதையின் வலிமைக்கு சரியாக பொருந்தும் என நினைத்தோம்,” என இயக்குநர் கூறியுள்ளார்.
அந்த சமயம் கமல் ஹே ராம் படத்தின் பணி காரணமாக மிகவும் பிஸியாக இருந்ததால், “கொஞ்சம் நேரம் கொடுங்க, பண்ணலாம்” என்று சொன்னார். ஆனால் திட்டத்தின் நேரம் நீளாமலிருக்க, அஜித் குமார் க்கு படம் சென்றது. கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் கலக்கியிருப்பார். அதனால் கமல் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என கற்பனையில் மிதக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.
“சிட்டிசன்” படம் அஜித்தின் கரியரில் ஒரு வித்யாசமான மைல்கல் ஆனது. அதிரடி காட்சிகள், சஸ்பென்ஸ், கதை மாந்தர்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தன. கமல் நடித்திருந்தால் படம் இன்னொரு விதமாக உருவாகியிருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த தகவல் வெளிவந்த பிறகு, சமூக வலைதளங்களில் கமல் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இருவரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். “கமலின் வேடமாற்ற திறமை + சிட்டிசன் கதைக்களம் = கலக்கல் படம்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா உலகில் இப்படியான “what if” தருணங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் தருவதாகவே இருக்கும். சிட்டிசன் அஜித்தின் படமாக இருந்தாலும், அதன் பின்னணி கதையை அறிந்த ரசிகர்கள் தற்போது புதிய பார்வையில் இந்த படத்தை நினைவுகூர்கிறார்கள். கமல் நடித்திருந்தாலும் கூட இந்த படம் கண்டிப்பாக ஹிட் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.