கமல் போல் நடந்து கொண்ட சிவகார்த்திகேயன்.. எஸ்கேபான நண்பன்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

இந்த சூழலில் கமல் போல் நடந்து கொண்டதால் சிவகார்த்திகேயன் நண்பன் விலகியதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. அதாவது கமல் பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என அனைத்திலும் வேலை பார்த்திருக்கிறார்.

அவர் அவருடைய படத்தின் கதை தலையீட்டில் கமலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனாலேயே அவரது படங்கள் பல தோல்வி பெற்றதாக விமர்சனங்களும் வந்தது. அதோடு விக்ரம் படத்தை முழுக்க முழுக்க லோகேஷ் இடம் கமல் ஒப்படைத்து விட்டார்.

சிவகார்த்திகேயனால் படத்தை கைவிட்ட இயக்குனர்

அதனால் தான் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்றும் கூறப்பட்டது. இப்போது அதேபோல் சிவகார்த்திகேயனும் கதை தலையீட்டில் ஈடுபட்டதால் தான் சிபி சக்கரவர்த்தி அந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் 100 கோடி வசூல் படமான டான் படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்கியிருந்தார். இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது கதையில் சிவகார்த்திகேயன் மாற்றம் சொன்னதால் இந்த ப்ராஜெக்ட் இல் இருந்து சிபி விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் தெலுங்கு சினிமாவில் நானியை வைத்து சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்க இருக்கிறார். சினிமாவில் வெற்றி பெற்றதும் சிவகார்த்திகேயன் இப்படியா செய்வது என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →