சிவாஜி தான் வேண்டும் என அடம் பிடித்த நடிகர்கள்.. தன் பாணியிலேயே நடிகர் திலகம் அசத்திய 5 படங்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. அந்த அளவுக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் உடல் மொழி, பாவனை என அனைத்தையும் கனகச்சிதமாக செய்யக்கூடியவர். அவ்வாறு உள்ள சிவாஜியை தன் படத்தில் நடிக்க வேண்டும் என அடம் பிடித்து 5 நடிகர்கள் நடிக்க வைத்துள்ளனர்.

பசும்பொன் : பாரதிராஜா இயக்கத்தில் சீமான் திரைகதையில் உருவான திரைப்படம் பசும்பொன். இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பிரபுவின் தாத்தாவாக சிவாஜி நடித்திருந்தார். இளம் வயதிலேயே விதவையான மகளின் வாழ்க்கையை கருதி அவருக்கு மறுமணம் செய்து வைக்கிறார். இதில் சிவாஜியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

தேவர் மகன் : கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் முக்கியமாக பார்க்கப்படும் ஒரு படம் தேவர் மகன். இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தில் சக்திவேலாக நடித்திருக்கும் கமலஹாசனின் தந்தை பெரியதேவராக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு அபாரமாக இருந்தது.

முதல் குரல் : சிவாஜி, அர்ஜுன், கனகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல் குரல். இந்தப் படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். குகநாதன் இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அர்ஜுனை விட சிவாஜி பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

படையப்பா : கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி, ரஜினி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இந்தப் படத்தில் ரஜினி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனது அப்பா கதாபாத்திரத்தில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என விரும்பி கேட்டுக் கொண்டாராம். மேலும் இதுதான் சிவாஜியின் கடைசி படமாக அமைந்தது.

ஒன்ஸ் மோர் : சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சிம்ரன், விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர். ஒரு இளம் காதலை சேர்த்து வைப்பவராக சிவாஜியின் இந்தப் படத்தில் நடித்திருந்தார். அப்போது இளம் வயதில் உள்ளது போல் அதே எனர்ஜியுடன் ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி நடிப்பு, நடனம் என அசித்திருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →