மார்க்கெட்டை தக்க வைக்க ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் மார்க்கெட்ட எகிற வச்ச ஊ சொல்றியா மாமா

பல நடிகைகள் தங்களது மார்க்கெட்டை எகிற வைக்கவும், தொலைந்துப்போன மார்க்கெட்டை திரும்ப பெறவும் கையில் எடுக்கும் ஒரே ஆயுதமாக பார்க்கப்படுவது தான் ஐட்டம் டான்ஸ். படங்களில் காமெடி, ஆக்ஷன் இருக்கிறதோ, இல்லையோ ஐட்டம் டான்ஸ் இருந்தால் போதும் படம் எப்படியோ திரையரங்குகளில் ஓடிவிடும். அந்த யுக்தியை பயன்படுத்திக்கொண்டு சில நடிகைகள் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்துவர். அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

நயன்தாரா: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஐயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில், தொடர்ந்து சில படங்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். பின்பு மார்க்கெட்டை இழந்த நயன்தாரா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி ரீ என்ட்ரி கொடுத்தார். இப்பாடலுக்கு முன்பாகவே சிவாஜி படத்தில் ரஜினியுடன் காவேரி ஆறும் பாடலில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி: கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படத்தில் நடித்து வந்தார். சில காலங்களில் அஞ்சலி, தனது மார்க்கெட்டை இழந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் இணைந்து குத்தட்டம் போட்டார். அண்மையில் தெலுங்கு நடிகருடன் இணைந்து அஞ்சலி ஆடிய ராமலோ என்ற ரீமேக் பாடல் இணையத்தில் கலக்கியது.

சமந்தா: நடிகை சமந்தா தெலுங்கு, தமிழ் மொழி என பலருக்கு பிடித்த நடிகையாக வலம் வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான பின்னர் கவர்ச்சியை காட்டாமல் சில படங்களில் சமந்தா நடித்திருந்தாலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடினார். 4 வருடங்கள் அடக்கி வைத்த தனது மொத்த கவர்ச்சியையும் அந்த ஒற்றை பாடலில் காண்பித்து சமந்தா தனது மார்க்கெட்டை இந்திய அளவில் எகிற வைத்துள்ளார்.

ஷ்ரேயா சரண்: நடிகை ஷ்ரேயா தமிழ், தெலுங்கு என தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருபவர். அந்த வகையில் ரஜினியின் சிவாஜி படத்தில் நடித்தது மூலமாக தனது மார்க்கெட்டை பாலிவுட் வரை உயர்த்தி கொண்டார். ஆனால் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான இந்திரலோகத்தில் நா.அழகப்பன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் ஷ்ரேயா சரண் ஐட்டம் டான்ஸ் ஆடியிருப்பார். இந்த பாடலில் ஷ்ரேயா சரண் ஆடி தனது மொத்த மார்க்கெட்டையும் இழந்தார்.

ஆண்ட்ரியா: பாடகியாக அறிமுகமாகி, நடிகையாக உருவான ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர். சில காலங்கள் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், நடிகர் ஜீவா,சந்தானம் நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் ரொமான்டிக் பாடலில் கவர்ச்சியாக ஆடி ரசிகர்களை குதூகலபடுத்தியிருப்பார். இப்பாடலுக்கு பின்பு ஆண்ட்ரியாவுக்கு தொடர் பட வாய்ப்புகள் குவிந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →