உலக நாயகனின் வாரிசு என்ற கெத்துடன் சினிமாத்துறைக்கு வந்துள்ள ஸ்ருதிஹாசன் சந்திக்காத சர்ச்சைகளே கிடையாது. அப்பா வழியில் மகள் என்பதற்கு ஏற்ப இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தான் அதிக விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது கமல் எப்படி தன்னுடைய வாழ்க்கையை தனக்கு பிடித்தவர்களுடன் வாழ்கிறாரோ அதேபோன்று இவரும் தனக்கான காதலை தேடிக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி இவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 5 நபர்களைப் பற்றி இங்கு காண்போம்.
மைக்கேல் கோர்சேல்: இத்தாலிய வம்சாவழியில் வந்த லண்டனை சேர்ந்த நடிகரான இவர் ஸ்ருதிஹாசனடன் ஒரு வருட காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் கூட மீடியாவில் வெளியாகி வைரலானது. அது மட்டுமல்லாமல் ஒரு நிகழ்ச்சியில் இந்த ஜோடி கமல்ஹாசன் உடன் இணைந்து வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்து விட்டனர்.
ரன்பீர் கபூர்: பாலிவுட் நடிகரான இவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர். ஆனால் சில மாதங்கள் கூட இவர்களுடைய உறவு நீடிக்காமல் பிரேக் அப்பில் முடிந்தது.
சித்தார்த்: சாக்லேட் ஹீரோவாக இருக்கும் இவருடன் ஸ்ருதிஹாசன் கடந்த 2010 ஆம் ஆண்டு லிவ்விங் ரிலேஷன்ஷிப் உறவில் இருந்துள்ளார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த இவர்கள் டேட்டிங் செய்வதாக பல செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இந்த செய்தி உண்மை என்று ரீதியில் தான் பேசப்பட்டது.
நாக சைத்தன்யா: சமந்தாவின் முன்னாள் கணவரான இவர் தன் திருமணத்திற்கு முன்பாக ஸ்ருதிஹாசன் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து மூன்று வருடம் ஒன்றாக வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடின் காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தான் இவர் சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் இப்போது விவாகரத்தில் முடிந்து விட்டது.
சாந்தனு ஹசாரிகா: டூடுல் கலைஞர் ஆன இவருடன் தான் தற்போது சுருதிஹாசன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இணைந்து இருக்கிறார். இதை வெளிப்படையாக கூறி வரும் அவர் தன் பாய் பிரண்டுடன் ஒன்றாக இருக்கும் போட்டோ, வீடியோ அனைத்தையும் மீடியாவில் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள் என்று நம்பப்பட்டது.
ஆனால் கல்யாணமா நோ சான்ஸ் என்று ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறி இருப்பது சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் அப்பா போலவே இவரும் கல்யாணம் என்றாலே அறவே வெறுத்து ஒதுக்குகிறார். இதன் மூலம் கமலின் வாரிசு என்பதையும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.