கார்த்தி களம் கண்ட 5 கிராமத்து கதைகள்.. பாக்ஸ் ஆபிஸை திணறடித்த இரண்டு வெற்றி படங்கள்

கார்த்திக்கு கிராமத்து கதை தான் செட் ஆகும் என ரசிகர்களிடையே ஒரு கருத்து வெகுவாக நிலவி வருகிறது, இதற்கு காரணம் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் தான். கார்த்திக்கு கிராமத்து கதாபாத்திரம் மிகவும் கண கச்சிதமாக பொருந்தி விடும். அவர் நடித்த கிராமத்து படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்து, வசூல் வேட்டையும் செய்திருக்கிறது.

கார்த்தியின் கிராமத்து திரைப்படங்களின் லிஸ்ட் இதோ : கார்த்திக், ராமராஜன், பிரபு, முரளி, விஜயகாந்த் இவர்களுக்கு அடுத்து கிராமத்து கதாபாத்திரம் பக்காவாக பொருந்தும் 20ஸ் நடிகர் என்றால் அது கார்த்தி தான்.

பருத்தி வீரன் : அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன் நடித்த பருத்திவீரன் படம் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்த பட அறிவிப்புக்கு பின் தான் நடிகர் சூர்யாக்கு ஒரு தம்பி இருப்பதே தெரிந்தது. பக்காவான இந்த கிராமத்து கதையின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு 6 மாதத்துக்கு முன்பு தான் கார்த்தி அமெரிக்காவில் இருந்தே வந்தாராம். ஆனால் அப்படியே கிராமத்தில் வளர்ந்த முரட்டுத்தனமான மனிதனாகவே இருப்பார். இந்த படம் 15 கோடி வசூல் செய்தது.

கொம்பன் : கொம்பன் கார்த்தி-முத்தையா முதல் கூட்டணி. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் லட்சுமி மேனன், கோவைசரளா,ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் கார்த்தி தேவர் இதை சேர்ந்த மதுரைக்காரராக நடித்திருப்பார். நகரங்களில் இந்த படம் எடுபடவில்லை என்றாலும் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஹிட் படமாக வெற்றியடைந்தது.

கடைக்குட்டி சிங்கம் : கடைக்குட்டி சிங்கம் கிராமத்து கதை மட்டுமல்லாமல் நல்ல ஒரு குடும்ப கதையாகும். 2018 ஆம் வெளியான இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கினார். கார்த்தியுடன் சத்யராஜ், விஜி சந்திரசேகர், சூரி, சாயீஷா, யுவராணி, மௌனிகா நடித்த இந்த திரைப்படம் 37 கோடி வசூல் செய்தது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரித்தது.

சுல்தான் : 2021 ஆம் ஆண்டு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, ராஷ்மிகா, நெப்போலியன், லால் நடித்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

விருமன் : கார்த்தி-முத்தையா இரண்டாவது கூட்டணியில் உருவான விருமன் திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், இந்திரஜா ஷங்கர் நடித்த இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்று உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →