நான் மாஸ் ஹீரோன்னு சிவகார்த்திகேயன் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. இப்பவும் கழுத்தை நெரிக்கும் கடன்

காமெடிகளை துணையாக கொண்டு தன் பயணத்தை தொடங்கியவர் தான் சிவகார்த்திகேயன். அதன்பின் தொகுப்பாளராக இருந்து படிப்படியாக வெள்ளி திரையில் முத்திரை பதித்தார். இவர் நகைச்சுவைக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

அதன்பின் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பு கிடைத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இருப்பினும் நான் ஒரு மாஸ் ஹீரோன்னு நடித்து மொக்கை வாங்கிய இவரின் 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

காக்கி சட்டை: 2015ல் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் காக்கி சட்டை. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஸ்ரீதிவ்யா. அனிருத் இசை அமைப்பில் வந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. மேலும் இப்படம் கமர்சியல் ஹிட் கொடுத்த நிலையில் படத்தில் புதுசா எந்த ஒரு சுவாரசியம் இல்லாததால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லை.

ரஜினி முருகன்: 2016ல் வெளிவந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக அமையாமல் ஒரு சராசரி ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஆக மட்டும் தான் இருந்தது.

சீமராஜா: 2018ல் சிம்ரன், கீர்த்தி சுரேஷ், சமந்தா, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த படம் தான் சீமராஜா. இப்படத்தை பொன்ராம் இயக்கி இருப்பார். மேலும் இப்படம் வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களிடையே நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று தந்தது. சிவகார்த்திகேயனுக்கு இப்படமும் கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மிஸ்டர் லோக்கல்: 2019ல் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த படம் தான் மிஸ்டர் லோக்கல். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் வெளியிட்டது. இப்படத்தின் பட்ஜெட் ஆக பார்க்கையில் 35 கோடி செலவிடப்பட்டது. ஆனால் வெறும் 25 கோடியே வசூலை பெற்று தந்தது. அதனால் தயாரிப்பாளர் தரப்பில் இப்படம் பெரிய இழப்பை ஏற்படுத்தியது.

ஹீரோ: 2019ல் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஹீரோ. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பட்ஜெட் 36 கோடி. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வெறும் 35 கோடி வசூலை பெற்று தந்தது. இப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஃபெயிலியர் படமாக அமைந்தது. அந்த வகையில் இவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பெரும் கடன் நெருக்கடியில் இருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →