சிவகார்த்திகேயன் வலை வீசும் 5 வெற்றி இயக்குனர்கள்.. சின்ன மீனை வைத்து பெரிய மீனுக்கு போடும் தூண்டில்

சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வளர்ச்சியை அடைந்திருக்கும் இவர் அடுத்ததாக டாப் ஹீரோக்களின் ஆஸ்தான இயக்குனர்களாக இருப்பவர்களுடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் வலை வீசும் ஐந்து வெற்றி இயக்குனர்கள் பற்றி இங்கு காண்போம்.

ஷங்கர்: பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் இவர் ரஜினி, கமல் ஆகிய உச்ச நடிகர்களின் ஆஸ்தான இயக்குனர் ஆவார். தற்போது இந்தியன் 2 படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து வரும் இவர் அடுத்ததாக வரலாற்று கதையையும் படமாக்க இருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் இவரிடம் வாய்ப்பு கேட்டு வாரிசையே சிபாரிசுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த வகையில் அதிதி, சிவகார்த்திகேயனுக்காக தன் அப்பாவிடம் பேசி இருக்கிறாராம். அதற்கான பதில் தான் இன்னும் கிடைக்கவில்லை.

வெற்றிமாறன்: தனுஷை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் சமீபத்தில் விடுதலை திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்திலும் இணைய இருக்கிறார். இப்படி பிசியாக இருக்கும் இவருடன் ஒரு படத்திலாவது இணைய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஏஆர் முருகதாஸ்: பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். விஜய், ரஜினி உட்பட பலருடனும் பணியாற்றி இருக்கும் இவர் இப்போது சிறு இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருக்கிறார். அந்த வகையில் தோல்வி இயக்குனர் என்று இவரை பலரும் ஒதுக்கி வைத்த நிலையில் சிவகார்த்திகேயன் இவருடன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வராகவன்: வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடைசியாக இவர் சில தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் இவருடைய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் அடுத்த பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் இவருடன் இணைய வேண்டும் என்பதில் அதிக தீவிரமாக இருக்கிறார்.

கௌதம் மேனன்: தனக்கே உரிய பாணியில் காதல் படங்களை கொடுத்து வரும் இவர் இப்போது வெந்து தணிந்தது காடு 2 படத்தின் கதை எழுதுவதில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இவருடைய அடுத்த படத்தில் எப்படியாவது வாய்ப்பு வாங்கி விட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →