பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்த ‘விக்டர்’.. அருண் விஜய்யின் சிறந்த 5 படங்கள்

நடிகர் அருண்விஜய் சிறந்த கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக இருப்பவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்திருக்கிறார் என்றே சொல்லலாம். என்னதான் பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் அந்த பணம் மற்றும் புகழை அனுபவித்து அப்படியே இருந்து விடாமல் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் போராடி இன்று டாப் நடிகராக இருக்கிறார்.

என்னை அறிந்தால்: இயக்குனர் கௌதம் மேனனின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அருண்விஜய்க்கு மறுவாழ்வு கொடுத்தது என்றே சொல்லலாம். அருண் விஜய்யாக 20 வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த இவரை விக்டராக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த திரைப்படம் இது. இந்த படத்தில் அருண் விஜய் பெயர் வாங்கியதில் நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

குற்றம் 23: இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் குற்றம் 23. இன்றைய நவீன மருத்துவத்தில் நடக்கும் முறைகேடான செயல்களை சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லராக சொல்லியது இந்த திரைப்படம். இதில் அருண் போலீசாக நடித்தார். இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

செக்கச்சிவந்த வானம்: இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த திரைப்படம் செக்கச்சிவந்த வானம். சிம்பு, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுக்கிடையே இவரும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பாண்டவர் பூமி: இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாண்டவர் பூமி. ராஜ்கிரண், சந்திரசேகர், ரஞ்சித் ஆகியோர் நடித்த இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். நீண்ட வருடங்களாக தோல்வி படம் மட்டுமே கொடுத்து வந்த அருண் விஜய்க்கு இந்த படம் வெற்றி படமாக அமைந்தது.

இயற்கை: அருண் விஜய், ஷ்யாம், குட்டி ராதிகா நடித்த இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருந்தார். வெண்ணிற இரவுகள் என்ற கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படம் அந்த ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான மாநில விருதை பெற்றது. இந்த படம் மொத்தம் 30 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →