வெந்து தணிந்தது காடு இண்டர்வல் பிளாக், கிளைமாக்ஸை பற்றி வாய் திறந்த சிம்பு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் STR ன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் இயக்குகிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை பற்றி சிம்பு முதன் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சிம்பு பொதுவாகவே அவருடைய படத்தின் ஆடியோ லாஞ்சுக்களில் கொஞ்சம் அதிகமாகவே பேசுவார். ஆனால் கடந்த வாரம் வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடந்த விழாவில் சிம்பு வாயை திறக்கவே இல்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.

இப்போது சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி முதன்முறையாக வாய் திறந்திருக்கிறார். சிம்பு பேசும் போது இந்த படத்தின் இண்டர்வெல் பிளாக்கும், கிளைமாக்ஸும் மிக முக்கியமான காட்சிகள் என்றும் ரசிகர்கள் அந்த காட்சிகளை உற்று கவனிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும், சிலம்பரசனின் நடிப்பு திறமை மொத்தத்தையும் இந்த படத்தில் காட்டியிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து சிம்பு-கௌதம் மேனனின் மூன்றாவது கூட்டணி வெந்து தணிந்தது காடு.

AR ரகுமான் இசையில், தாமரை பாட்டு எழுதி இருக்கிறார். இந்த படம் முற்றிலும் கிராமத்து பின்னணி கலந்த ஆக்சன் திரைப்படம். இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்தது. இந்த படத்தின் சில காட்சிகளுக்காக சிம்பு 15 கிலோ எடையை குறைத்திருக்கிறார். அந்த காட்சிகளில் எல்லாம் ஒரு 18 வயது இளைஞனை போல் தோற்றமளிக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கியிருக்கிறது. சிம்புவின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →