Kamal-Ambhika: கமல் தற்பொழுது இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு தன் அடுத்த கட்ட படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இவரின் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று பிறந்தநாள் காணும் அம்பிகா உடன் இணைந்து கலக்கி 5 படங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
காதல் பரிசு: 1987ல் ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ராதா, அம்பிகா, கமல், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். துரத்தி துரத்தி காதலிக்கும் காதலியாகவும் அதன் பின் சில சதியால் பிரிந்து, கமலை எதிரியாக பார்க்கும் கதாபாத்திரத்தில் தன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார் அம்பிகா. இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
விக்ரம்: 1986ல் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ராவை சேர்ந்த சிறந்த ஏஜென்ட் ஆக மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று கமல் நடித்திருப்பார். இப்படத்தில் இவரின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் அம்பிகா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று, வணிக ரீதியாய் வெற்றியைக் கண்டது.
சகலகலா வல்லவன்: 1982ல் எஸ் பி முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல், அம்பிகா, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். கமலுக்கு ஜோடியாய் அம்பிகா தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இப்படம் 175 நாட்கள் ஓடி வெற்றி சாதனையை படைத்தது.
காக்கி சட்டை: 1985 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அம்பிகா, மாதவி, சத்யராஜ், கமலஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரியான கமலுக்கு உறுதுணையான கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் அம்பிகா. இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று கமர்சியல் ரீதியான வெற்றியை பெற்று தந்தது.
வாழ்வே மாயம்: 1982ல் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி,ஸ்ரீபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். ஆனால் இப்படத்தில் அம்பிகா ஒரு சில காட்சிகளிலேயே இடம் பெற்று இருப்பார். இருப்பினும் கமல் நடிப்பில் இப்படம் 200 நாளுக்கு மேல் ஓடி வெற்றியை கண்டது.