தனக்குள் இருக்கும் திறமைகளை அலசி ஆராய்வதில் வல்லவர் நம் உலக நாயகன். சினிமாவில் இவரின் பங்காற்றலை பற்றி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், நடிகர் ஆகிய அனைத்திலும் தன்னை நிரூபித்துக் கொண்டவர்.
இவர் இயக்கி நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்திருக்கும் வகையில் பாடலையும் விட்டு வைக்காமல் பாடி அசத்தி வெற்றி கொடுத்திருக்கிறார். இது அவர் பாடலில் மேற்கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இவர் தன் காந்த குரலால் மெய்சிலிர்க்க வைத்த 6 பாடல்களை பற்றி இங்கு காண்போம்.
நாயகன்: வேறுபட்ட கதாபாத்திரத்தில் கமலின் நடிப்பில் இப்படம் வெற்றி கண்டது. நீங்க நல்லவரா கெட்டவரா என்று வரும் வசனம் இந்த படத்திற்கு முக்கியத்துவம் தேடித் தந்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை இவர் பாடியிருப்பார்.மேலும் இந்த பாடல் இப்படத்திற்கு ஒரு உருக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.
குணா: இப்படம் காதலர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட ஒன்றாகும். அதிலும் இவரின் அபிராமி அபிராமி என்ற வார்த்தையின் மாடுலேஷன் வேற லெவலில் அமைந்திருக்கும். மேலும் குறிப்பாக குகையின் நடுவில் எடுக்கப்பட்டிருக்கும். இவரின் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தது.
சிங்காரவேலன்: இப்படத்தில் கமல் மற்றும் குஷ்பூ இணைந்து நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் வரும் நகைச்சுவை கலந்த காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர செய்தது. அதிலும் இவர் பாடி அசத்திய போட்டு வைத்த காதல் திட்டம் என்ற பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
தேவர் மகன்: சிவாஜி, கமல், கௌதமி, ரேவதி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் இவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது. இதில் இவர் விரும்பிய வாழ்க்கை கிடைக்காது கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இதில் வரும் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல் இவருக்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்தது.
ஆளவந்தான்: இப்படத்தில் இரு வேறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆண்டவர். அதில் வரும் நெகட்டிவ் ரோல் காண்பவரை அச்சப்படும் விதமாக அமைந்திருக்கும். மேலும் இவரின் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற பாடலை வெவ்வேறு மாடுலேஷனில் பாடி இருப்பார். இது அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
விக்ரம்: இவர் அண்மையில் நடித்து வெளிவந்த படமான இப்படத்தில் தன் குரலில் பத்தல பத்தல என்ற பாடலை பாடியிருக்கிறார். அது கேட்பவர் அனைவரையும் குத்தாட்டம் போட வைக்கும் விதமாக இருந்தது. இந்த பாடலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த ஒன்றாகும்.மேலும் இது போன்ற பாடல்கள் உடன் ஆண்டவரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.