டாப் ஹீரோக்களை பயமுறுத்திய 5 நடிகர்கள்.. ரிலீஸை தள்ளி போட சொன்ன சூப்பர் ஸ்டார்

80ஸ், 90ஸ் காலங்களில் டாப் நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல், விஜயகாந்த் தான். ஆனால் இந்த நடிகர்களுக்கே டப் கொடுத்து அவர்களை மிரள விட்ட நடிகர்களும் அந்த காலத்தில் இருந்தார்கள். இப்போது அவர்கள் சூப்பர் ஸ்டார்ஸ் ஆக இல்லை என்றாலும் அன்றைய கால கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இவர்களை பார்த்து மிரண்டு தான் போயிருக்கிறார்.

மோகன்: 1980 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மூடு பனி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் மோகன். இவரை ‘மைக்’ மோகன் என்று சொன்னால் தான் தெரியும். மௌன ராகம், கோபுரங்கள் சாய் வதில்லை, நூறாவது நாள், மெல்ல திறந்தது கதவு என பல ஹிட் படங்களை கொடுத்தார். கமலின் இடத்தை இவர் பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர்.

சுதாகர்: தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதாகர். சுதாகர் வெற்றி விழா நாயகன் என்றே அழைக்கப்பட்டார். ‘மாந்தோப்புக்கிளியே’, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘கரை கடந்த ஒருத்தி’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.

ராமராஜன்: எல்லா ஹீரோக்களில் இருந்தும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியவர் ராமராஜன். இவருடைய கரகாட்டக்காரன் 300 நாட்களுக்கும் மேல் தியேட்டரில் ஓடியது. கிராமிய கதைகளின் கதாநாயகனாக ரசிகர்களை தன்னுடைய வசம் வைத்திருந்தார்.

ராஜ்கிரண்: பட தயாரிப்பாளராக கோலிவுட்டிற்கு வந்த ராஜ்கிரண். இவருடைய ராசாவின் மனசிலே, எல்லாமே என் ராசா தான், அரண்மனை கிளி போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடியது. ஒரு முறை ரஜினியே இவருக்கு நேரடியாக போன் செய்து படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொன்னாராம்.

முரளி: கிட்டத்தட்ட ரஜினி, விஜயகாந்த் வரிசையில் வந்தவர் தான் நடிகர் முரளி. நல்ல காதல் கதைகளின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர். சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் என்ற பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →