ஒன்றுக்கு மேல் தேசிய விருது வாங்கிய 4 தென்னிந்திய நடிகர்கள்.. நடிப்பு அரக்கர்கள்

சினிமாவை பொறுத்த வரை நடிகர், நடிகைகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுவது விருதாக மட்டுமே இருக்க முடியும். இவ்வாறு மிக உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசிய விருது. இவ்விருது பல்வேறு பிரிவுகளின் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு சிறந்த நடிகருக்கான விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாங்கிய நடிகர்களை பார்க்கலாம்.

கமலஹாசன் : தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களுள் ஒருவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமாவிற்கு பல அற்புத படைப்புகளை தந்துள்ளார். உலகநாயகன் கமலஹாசன் 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் இதுவரை 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கமலஹாசன் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

மம்முட்டி : மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 37 வது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மதில்கள் மற்றும் ஒரு வடக்கன் வீரகதை என்ற இரண்டு மலையாள படத்திற்காக 1989 இல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். அதன்பிறகு 1993 இல் பொந்தன் மட மற்றும் விதேயன் படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதைத்தொடர்ந்து டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டி பெற்றார்.

மோகன்லால் : மலையாள சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இவர் 39 வது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாரதம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் விருது பெற்றார். இதைத் தொடர்ந்து மலையாள படமான வானபிரஸ்தம் படத்தில் நடித்ததற்காக 1999 இல் தேசிய விருது பெற்றார்.

தனுஷ் : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த 39 படங்களில் இரண்டு படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் மற்றும் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →