கமல் மட்டும்தான் காமெடியில் கலக்குவாரா.? ரஜினி சக்சஸ் கொடுத்த 6 முழு நீள நகைச்சுவை படங்கள்

உலக நாயகன் கமல்ஹாசனின் தற்போதைய படங்களில் காமெடி இல்லை என்றாலும் கிரேசி மோகன் இருந்த வரையில் அவரது படங்களில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். ஆனால் கமல் மட்டும்தான் காமெடியில் கலக்குவாரா, நானும் காமெடியில் வல்லவன் என்பதை ரஜினி நிரூபித்துக் காட்டி உள்ளார். இவ்வாறு முழு நீள நகைச்சுவையாக ரஜினி நடித்த 6 படங்களை பார்க்கலாம்.

தில்லு முல்லு : பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தில்லுமுல்லு. இந்தப் படத்தில் ரஜினி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி மூவரும் இடையிலான காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. சந்திரன், இந்திரன் என ரஜினி செய்யும் லூட்டி படத்துக்கு வெற்றியை வாங்கித் தந்தது.

குரு சிஷ்யன் : எஸ் பி முத்துராமன் இயக்க ரஜினி, பிரபு கூட்டணியில் வெளியான திரைப்படம் குரு சிஷ்யன். இந்த படத்தில் வினு சக்கரவர்த்தியை வைத்து ரஜினி, பிரபு இருவரும் செய்யும் லீலைகள் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருந்தது. இந்த படத்தில் காமெடி ரஜினிக்கு பக்காவாக பொருந்தி இருந்தது.

அதிசயப் பிறவி : எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, நாகேஷ், சோ ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அதிசய பிறவி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கல்யாண் மற்றும் பாபு என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் முழு நீள நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.

தர்மத்தின் தலைவன் : குரு சிஷ்யன் படத்திற்கு பிறகு மீண்டும் பிரபு, ரஜினி காம்போவில் வெளியான திரைப்படம் தர்மத்தின் தலைவன். இந்தப் படத்தில் ரஜினி ஞாபக மறதி உடைய ஆசிரியராக நடித்து அசத்தி இருப்பார். இந்த படம் இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

ராஜாதி ராஜா : ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி, ஜனகராஜ், ராதா, நதியா மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இந்த படத்தில் ராஜா மற்றும் சின்னராசு என்று இரட்டை கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். இதில் சின்னராசு என்ற வெளந்தியான கதாபாத்திரத்தில் ரஜினி பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

வீரா : சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, ரோஜா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரா. இந்தப் படத்தில் ரஜினி முத்து வீரப்பனாக கிராமத்தில் இருந்து நகரத்தில் பாடல் போட்டியில் பங்கு பெறுவதற்காக வருகிறார். அங்கு ரஜினியால் நடக்கும் சுவாரஸ்யமான காமெடி ரசிகர்களை கவர்ந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →