சாட்டிலைட் வியாபாரமாகாமல் திணறும் 4 படங்கள்.. சன் டிவியை விடுங்க விஜய் டிவியும் வாங்க மறுத்த ஜனநாயகன்

2026ஆம் ஆண்டுக்கான படங்களை எல்லாம் ஓடிடி நிறுவனங்கள் ஓரளவு செட்யூல் செய்து முடித்து விட்டது. இனிமேல் அவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான படங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப்போல் மற்றொரு வியாபாரத் தளமான சாட்டிலைட் உரிமைகளும் படத்தின் லாபத்தில் பெரும் பங்கு வகிக்கும்.

இந்த ஆண்டு பெரிய ஹீரோக்களின் நான்கு படங்கள் சாட்டிலைட் விற்காமல் கிடப்பில் கிடக்கிறது. சின்ன படங்களாக இருந்தால் கூட பரவாயில்லை எல்லாமே பெரிய பெரிய படங்கள். சமீபத்தில் அஜித் மற்றும் ஆதிக்க ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி படத்தின் சாட்டிலைட் உரிமைகள் இன்னும் விற்கவில்லை.

சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ரெட்ரோ. இந்த படத்தை 80 கோடிகள் கொடுத்து நெட்பிக்ஸ் வாங்கிய போதிலும் இதனின் சாட்டிலைட் உரிமைகள் இன்னும் விற்கவில்லை. அதைப்போல் இப்பொழுது சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் கருப்பு. இதுவும் வியாபாரமாக இல்லையாம்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க விஜய்யை வைத்து எச் வினோத் இயக்கிக் கொண்டிருக்கும் ஜனநாயகன் படமும் இன்னும் சாட்டிலைட் விற்பனையாகவில்லையாம். ஆனால் அமேசான் இந்த படத்தை கிட்டத்தட்ட 120 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளனர். எப்பொழுதுமே விஜய் படத்திற்கு போட்டி போடும் சன் டிவி இந்த முறை இதை கைவிட்டுள்ளது.

விஜய் திமுகவிற்கு எதிராக அரசியல் பிரவேசம் எடுத்த பிறகு வெளியாவதாலும், படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் நிறைய இருப்பதாலும் இதை சன் டிவி வாங்க மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். இருந்தபோதிலும் இதை விஜய் டிவியும் இன்னும் வாங்காதது ஆச்சரியம்.