சுத்தமா மனதை விட்டு தூக்கி எறிந்த கமல்.. லோகேஷ் கனகராஜ் டாட்டா போட்டும் இரங்க மறுக்கும் விண்வெளி நாயகன்

இப்பொழுது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் தான்.இவர்கள் கூட்டணியில் ஒரு படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். இதற்கு எப்படியும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிடும்.

இயக்குவதற்கு பிரேக் கொடுத்துவிட்டு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகும் அந்த படத்தில் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இதனால் ஒரு வருடம் அந்த படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பார் என்று தெரிகிறது. அதனால் கமல், ரஜினி படம் இப்போதைக்கு இல்லை.

ஏற்கனவே இந்தியன் 3 பஞ்சாயத்து இன்னும் முடிந்தபாடு இல்லை. ரஜினி வீடு வரை சென்று சங்கர் சிபாரிசு செய்யச் சொல்லியும் கூட கமல் இதற்கு ஒத்து வரவில்லை. அவர் மனதில் இருந்தே இந்தியன் 3 படத்தை தூக்கி எறிந்துவிட்டார். இன்னும் 15 நாட்கள் கால் சீட் கொடுத்தால் முடித்து விடுவாராம் சங்கர்.

இந்தியன் 2 படம் மொக்கை வாங்கியதை எடுத்து கமல் அதை எள்ளளவும் மதிப்பதில்லை. இதனால் இந்தியன் 3 வேண்டவே வேண்டாம் என நினைக்கிறார் போல். ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் லைக்காவிற்கு தான் பெரும் தலைவலியாக உள்ளது.

கமல் நடிக்கவிருந்த அன்பு அறிவு படம் தள்ளிப் போய் உள்ளது. லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கும் அடுத்த படத்திற்கும் கொஞ்சம் பிரேக் கிடைத்துள்ளது. சங்கரை பொருத்தவரை இந்தியன் மூன்றாம் பாகத்தின் மீதுதான் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். கமல் ஒத்துழைத்தால் மட்டும்தான் இந்தியன் 3 வரும்.