விஜய் சேதுபதிக்கு phone போட்ட கமலஹாசன்.. என்ன சொல்லி இருப்பாரு?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மிகப்பிரம்மாண்டமான முறையில் துவங்கவுள்ளது. ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது.

ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது என்றே சொல்லலாம். விஜய் சேதுபதி அவரது ஸ்டைலில் வேற லெவல் பண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் முதன் முதலில் பிக் பாஸ் வரும்போது, நிறைய விமர்சனங்கள் முன்வைக்க பட்டது. இருப்பினும் எப்போதுமே புதுமையான படைப்புகளை கொடுத்ததும் ஆதரித்தும் வரும் கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கமல் தொகுத்து வழங்குகின்றார் என்றால் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் ஏதேனும் புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவங்கினார்கள். முதல் சிசனிலேயே இந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

சேதுபதிக்கு அட்வைஸ் பண்ண கமல்

இந்த முறை, அரசியல் மற்றும் சினிமா வேலைகளின் காரணமாக கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விளக்கினார். தொடர்ந்து விஜய் சேதுபதி கமிட் ஆனார். இதை கேள்வி பட்ட உடன், கமல் அவருக்கு போன் செய்து தன வாழ்த்துக்களை கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் படங்களில் சிறப்பாக நடித்து அசத்துவது போல இந்நிகழ்ச்சியையும் சிறப்பாக தொகுத்து வழங்கவேண்டும். உங்களுக்கான தனி ஸ்டைலை இந்நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என விஜய் சேதுபதிக்கு சில அறிவுரைகளை கமல் கூறியதாக சொல்லப்படுகிறது.

அவர் சொன்னபடியே தற்போது அசாத்திக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் இனிமே தானே ஆட்டமே ஆரம்பிக்க போகிறது. தாக்கு பிடிப்பாரா விஜய் சேதுபதி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment