நான் எழுதிய கதையில் ரஜினி ஹீரோ இல்ல!. கூலி ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் சீக்ரெட்டை போட்டு உடைத்த லோகேஷ்

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரஜினிகாந்த் நான் எழுதிய கதை வேறு என லோகேஷ் பேட்டி கொடுத்திருக்கிறார்.

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற அதிகம் விரும்பினார். லோகேஷ் லியோ படத்தில் பிசியாக இருந்த நேரத்தில் ரஜினி நெல்சன் உடன் கூட்டணி அமைத்து சூப்பர் ஹிட் படமான ஜெயிலரை கொடுத்தார்.

சீக்ரெட்டை போட்டு உடைத்த லோகேஷ்

லியோ முடிந்த கையோடு லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் கூலி படத்தில் இணைந்தார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் ரஜினிக்காக தான் வேறொரு கதை எழுதியதாக சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த கதையில் ரஜினி ஹீரோ இல்லை.

அவரை வில்லனாக வைத்து இன்னொரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அது மிகவும் பிரம்மாண்டமான பேண்டஸி கதையாக இருக்கும். ஆனால் அந்த கதைக்கு ஃப்ரீ ப்ரொடக்ஷன் வேலை மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு செய்ய வேண்டியது வரும்.

ரஜினிகாந்த் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தை அந்த கதைக்காக இரண்டு வருடங்கள் வேஸ்ட் செய்ய நான் விரும்பவில்லை. அதனால் தான் கூலி கதையை அவருக்கு சொன்னேன் என பேசி இருக்கிறார்.