அடமானத்திற்கு வருகிறதா ரவி மோகனின் 5.9 கோடி சொத்துக்கள்?. தொடர் அடிகளால் திணறும் தனி ஒருவன்

Ravi Mohan: உடம்பு முழுக்க எண்ணெய் தேச்சு விட்டு கீழ உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அப்படித்தான் ரவி மோகனின் நிலைமையும் ஆகிவிட்டது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோவாக இருந்த ஜெயம் ரவி எல்லாம் இனி நல்லதாகவே நடக்கட்டும் என்று தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றினார்.

எந்த நேரத்தில் பெயரை மாற்றினாரோ அவரை துயரம் தான் சுற்றி சுற்றி அடிக்கிறது. மனைவியுடன் மனக்கசப்பில் மொத்தமாகவே அவருடைய பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது. தொடர்ந்து சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி படங்களும் இல்லை.

தொடர் அடிகளால் திணறும் தனி ஒருவன்

மேலும் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் இந்த நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுப்பதாக ரவி மோகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்.

முதல் படத்திற்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அட்வான்ஸ் ஆக ஆறு கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி படம் நடித்துக் கொடுக்காமல் மற்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.

மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ப்ரோ கோட் என்னும் படத்தையும் தயாரித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ரவி மோகன் வழக்கறிஞர் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் சொல்லியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ரவி மோகன் வாங்கிய ஆறு கோடிக்கு பதிலாக அவருடைய 5.9 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை நாலு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் ரவி மோகன் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்தது தான் இதற்கு காரணம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.